LIST OF IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 IN TAMIL

TNPSC  Payilagam
By -
0


ஜனவரி 2023 தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல் | முக்கிய தினங்கள்

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 1:

உலகளாவிய குடும்ப தினம்(INTERNATIONAL DAY OF FAMILIES) : உலகளாவிய குடும்ப தினம் ஆண்டுதோறும் ஜனவரி 1 ஆம் தேதி உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில், அமைதி மற்றும் பகிர்வுக்கான உலகளாவிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் முதல் நாள் உலகளாவிய குடும்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இது உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதும் நாளாகும்.கருப்பொருள் 'மக்கள்தொகை போக்குகள் மற்றும் குடும்பங்கள்' என்பதாகும் ‘Demographic Trends and Families’

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 4:

உலக பிரெய்லி தினம் WORLD BRAILLE DAYஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று பன்னாட்டு அளவில் அனுசரிக்கப்படுகிறது. பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடு உடையோர் ஆகியவர்கள் மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்ள உதவும் தகவல் தொடர்பு சாதனமான பிரெய்லியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை இந்நாள் கொண்டாடுகிறது.நிகழ்விற்கான தேதி 2018 ஆம் ஆண்டு ஒரு பிரகடனத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய இலூயிசு பிரெய்லின் பிறந்த நாளையும் இது குறிக்கிறது.முதல் உலக பிரெய்லி தினம் 2019 ஆம் ஆண்டு சனவர் மாதம் 4 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 6:

உலக போர் அனாதை தினம் (WORLD DAY OF WAR ORPHANS) : உலகில் நாடுகளுக்கு இடையே, உள்நாட்டுக்குள் நடக்கும் போரினால் குழந்தைகள் உட்பட பலர் ஆதரவற்றோராக மாற்றப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய வசதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜன. 6ல் உலக போர் அனாதை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனைக் கொண்டாடுவதன் நோக்கம், உலகப் போரின்போது அனாதையாகப் போன எண்ணற்ற குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எல்லா வகையிலும் பங்களிப்பதாகும். உலகப் போர் அனாதைகள் தினம் முதலில் பிரெஞ்சு அமைப்பான SOS Enfants en Deters ஆல் தொடங்கப்பட்டது. உலக அனாதைகள் தினம், அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளில், குறிப்பாக தொற்றுநோய்களுக்கு மத்தியில் குழந்தைகளைப் பராமரிப்பது முன்னுரிமை என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறது. உலகப் போர் அனாதைகள் தினம், உலகெங்கிலும் வளர்ந்து வரும் மனிதாபிமான மற்றும் சமூக நெருக்கடியின் வடிவத்தை எடுத்திருப்பதால், போரின் அனாதைகளுக்கு உரையாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 9:

பிரவதி பாரதி திவாஸ் (NRI) தினம் /  Pravasi Bharatiya Divas: மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915. அந்த நாள் நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்பட வேண்டும் என்று அப்போதுதீர்மானிக்கப்பட்டது. விழாவின் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விழா கொண்டாட்டத்தின்போது வெளிநாடுவாழ் இந்தியர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரவசி பாரதிய சம்மான் என்பது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருதாகும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி மத்திய, மாநில அரசுகளுடன் கலந்துரையாடவும், தொடர்புகளை மேற்கொள்ளவும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயவும் இவ்விழா உதவுகிறது.கடந்த 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் தில்லியிலும், 2005-ல் மும்பை, 2006-ல் ஹைதராபாத், 2007, மீண்டும் A2008-ல் தில்லி, 2009}இல் சென்னை, 2010 மற்றும் 2011-ல் தில்லி, 2012-ல் ஜெய்ப்பூர், 2013-ல் கொச்சி, 2014-ல் தில்லி, 2015-ல் மகாத்மா மந்திர், காந்தி நகர், குஜராத், 2017-ல் பெங்களூரு, 2018-ல் சிங்கப்பூர் 2019-ல் வாரணாசி ஆகிய இடங்களில் இவ்விழா நடைபெற்றது.2023 ம் ஆண்டுக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினம் ம.பி., மாநிலம் இந்தூரில்நடைபெற உள்ளது. முதன் முதலில் இவ்விழா 2003 டில்லியில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்றது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 10:

இந்தி எதிர்ப்பு தினம்:

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 11:

உலக சிரிப்பு நாள் :மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். இத்தினம் முதல் முதலாக சனவரி 10, 1988 இல் கொண்டாடப் பட்டது. இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 12:

தேசிய இளைஞர் தினம் (National Youth Day): சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 15:

இந்திய இராணுவ தினம் : இந்திய இராணுவ நாள் இந்தியாவில் ஜனவரி 15 ம் ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார். சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 21:

உலக மத தினம்

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 23:

தேசிய வலிமை தினம் (பராக்கிரம திவாஸ்) :நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்த தினம் ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய கலாசார துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் அறிவித்தாா்.நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும்.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 24:

சர்வதேச கல்வி தினம் (International Day of Education): ஆண்டுதோறும் சனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. கல்விக்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, உலகளாவிய அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான கல்வியின் பங்கைக் கொண்டாடும் வகையில், சனவரி 24 ஆம் தேதி பன்னாட்டு கல்வி நாளாக அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது

தேசிய பெண் குழந்தைகள் தினம் (National Girl Child Day) : இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது. பாலின சமநிலை மேம்படுத்துவது . பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 25:

தேசிய வாக்காளர் தினம் (National Voters' Day) :இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.1950ஆம் ஆண்டு சனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011-இலிருந்து இது பின்பற்றப்படுகிறது. சட்ட அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு, 2011 சனவரியில் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய சுற்றுலா தினம் / NATIONAL TOURISM DAY 2023: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய சுற்றுலா தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. நாட்டின் பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 26:

சர்வதேச சுங்க தினம்: 1953 ஆம் ஆண்டு இந்த நாளில் நடைபெற்ற உலக சுங்க அமைப்பின் தொடக்க அமர்வின் நினைவாக ஜனவரி மாதம் 26 ஆம் நாள் சர்வதேச சுங்க தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுங்க அமைப்பு 1952 ஆம் ஆண்டில் சுங்க கூட்டுறவு கழகமாக உருவாக்கப்பட்டது.

இந்திய குடியரசு தினம் (Republic Day of India) : இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 28:

லாலா லஜபதிராய் பிறந்த தினம்  (Birth Anniversary of Lala Lajpat Rai) :லாலா லஜபதிராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று பஞ்சாபில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கினார். பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் லட்சுமி இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றை நடத்தி வந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு சைமன் கமிஷனே (Simon Commission) வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீஸ் தடியடியால் கடுமையாக காயம் அடைந்தார். தடியடிக்கு ஆளாகிய மூன்று வாரத்தில் இறந்துபோனார். அதனால் இவர் பஞ்சாப் சிங்கம் என்று போற்றப்படுகிறார். இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்லாது, இந்திய சமூக சமயப் பண்பாட்டு மறுமலர்ச்சியிலும் ஆர்வம் காட்டினார். இவரின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 29:

தேசிய செய்தித்தாள் தினம் : இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார்.இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர் செய்திகளை பத்திரிக்கையில் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்திய விளம்பர தினம்  (Indian Advertisement Day) : இன்றைக்கு விளம்பரங்கள் இல்லாத பத்திரிகைகளே கிடையாது. செய்தித்தாள்களை தினமும் படிக்கின்ற பழக்கம் பலரிடம் உள்ளதால் இதில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்திய விளம்பரத் துறையின் சார்பாக ஜனவரி 29 ஆம் தேதியை இந்திய விளம்பர தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக வெளிவந்த பெங்கால் கெஜெட் என்கிற பத்திரிகையில் ஜனவரி 29 (1780) அன்று முதன்முதலாக விளம்பரமும் வெளிவந்தது. சோப்பு விளம்பரம் இதில் இடம் பெற்று இருந்தது. ஒரு இளம் பெண்ணின் முகம் அல்லது உடல் என்பது விற்பனையை அதிகப்படுத்தும் என்கிற நோக்கில் விளம்பரம் இடம் பெற்றிருந்தது. ஆண்களைக் கவர்வதற்காக இது போன்று பெண்களைக் கொண்டு விளம்பரம் செய்யப்பட்டது.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2023 - ஜனவரி 30:

தியாகிகள் தினம் :இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதாகும். தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மறைந்த சனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது

உலக தொழுநோய் தினம் World Leprosy Day 2023: உலக தொழுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி அனுசரிக்கப்படுகிறது.2023 உலக தொழுநோய் தினத்தின் கருப்பொருள் “இப்போதே செயல்படுங்கள். தொழுநோய்க்கு முடிவு கட்டுங்கள்.“Act Now. End Leprosy.”



Post a Comment

0Comments

Post a Comment (0)