தேசிய ஊரக சுகாதார திட்டம்/ National Rural Health Mission (NRHM):
- முதலில் 7 ஆண்டுகள் (2005-12) காலத்துக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இது கிராமப்புற பகுதிகளில் சுகாதார வசதிகளை வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- ஜனனி சுரக்ஷா யோஜனா இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
- மே 2013 இல் மத்திய அரசாங்கம் தேசிய ஊரக சுகாதார திட்டத்தை தேசிய சுகாதார திட்டத்தின் (National Health Mission) கீழ் ஒரு துணை திட்டமாக கொண்டுவந்துள்ளது.
தேசிய அளவில் எட்டப்பட வேண்டிய இலக்குகள்
- குழந்தை இறப்பு விகிதத்தை ஆயிரத்துக்கு முப்பதாய்க் குறைத்தல்
- தாய்மை இறப்பு விகிதத்தை இலட்சதுக்கு நூறாய்க் குறைத்தல்
- மொத்த கருத்தரிப்பு வீதத்தை 2.1 ஆய்க் குறைத்தல்
- ஆயுர்வேதம், சித்த மருத்துவம் (AYUSH) ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளை உயிர்ப்பித்தல்