கடல் மாலை திட்டம்
கடல் மாலை திட்டம் (Sagar Mala project) இந்தியத் துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அமைப்பதே கடல் மாலைத் திட்டத்தின் நோக்கமாகும். இதனால் நாட்டின் கடற்கரை பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும்.பழைய மீன்பிடி துறைமுகங்களையும், வணிக துறைமுகங்களையும் மேம்படுத்தும் திட்டத்திற்காக இந்திய அரசு 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளது.
பயன்கள் :
1, உள்நாட்டு நதிநீர் போக்குவரத்து சார் பலன்கள்.
2, சாலை போக்குவரத்து பெருமளவு தவிக்க படும், பயன்பாட்டு எரிபொருள் சிக்கனம்
3, சர்வ தேச அளவில் வாணிபம் சிறக்கும் மற்றும் உள்நாட்டு வாணிபம் எளிமை படுத்தபடும்.
4, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மாற்றும் தற்சார்பு கொள்கை பெருமளவு நிறைவேற்றபட்டு செயல்வேகம் கொள்ளும்
சாகர் மாலை திட்டத்தின் கீழ் ஆறு பெருந்துறைமுகங்கள் நிறுவ திட்டமிடப்ப்பட்டுள்ளது. அவைகள்:
மாநிலம் | இடம் | துறைமுகம் |
---|---|---|
கேரளம் | விழிஞம் | விழிஞ்ஞம் பன்னாட்டுத் துறைமுகம் |
தமிழ்நாடு | குளச்சல் | குளச்சல் இனயம் துறைமுகம் |
மகாராட்டிரா | வாத்வான் | வாத்வான் துறைமுகம் |
கர்நாடகா | தடடி | தடடி துறைமுகம் |
ஆந்திரப் பிரதேசம் | மச்சிலிப்பட்டினம் | மச்சிலிப்பட்டினம் துறைமுகம் |
மேற்கு வங்காளம் | சாகர் தீவு | சாகர் தீவு துறைமுகம் |