Central Government Schemes அந்த்யோதயா அன்ன யோஜனா

TNPSC  Payilagam
By -
0


 

அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏழைகளுக்கான உணவுத் திட்டம்)(Antyodaya Anna Yojana)

  • அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏழைகளுக்கான உணவுத் திட்டம்)(Antyodaya Anna Yojana) என்பது இந்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் இலட்சக் கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு அதிக மானிய விலையில் உணவை வழங்குவதற்கான இந்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும். 
  • இத்திட்டம் 25 திசம்பர் 2000 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 2000ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கும் துறையின் அமைச்சர் என் ஸ்ரீவிஷ்ணு துவக்கிவைத்தார்.முதலில் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் செயல்படுத்தப்பட்டது.
  • கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் "ஏழ்மையானவர்கள்" (வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 10,000,000 ஏழ்மையான குடும்பங்கள்) கண்டறியப்பட்ட பின்னர்அரசாங்கம் அவர்களுக்கு 35 கிலோகிராம் அரிசி மற்றும் கோதுமையை அதிக மானிய விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கத் தொடங்கியது. ஒரு கிலோ அரிசி ₹ 3, கோதுமை ₹ 2க்கும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
  • கணக்கெடுப்புகளின் மூலம் அந்தந்த மாநில கிராமப்புற மேம்பாட்டு வசதிகளால் ஏழைக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்தத் திட்டம் இரண்டு முறை, சூன் 2003-ல் ஒரு முறையும், பின்னர் ஆகத்து 2004-ல் இரண்டாம் முறையும் விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் கூடுதலாக 5,000,000 வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்த்து, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 20,000,000ஆகக் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பிறகு 2003-ல் கூடுதலாக 50 லட்சம் குடும்பங்கள் சேர்க்கப்பட்டன

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)