KALAIGNAR KARUNANIDHI CENTENARY LIBRARY 2023

TNPSC  Payilagam
By -
0

கருணாநிதி நூற்றாண்டு நூலகம்:

  • முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நூற்றாண்டையொட்டி, தமிழக அரசு சாா்பில் மதுரை- புதுநத்தம் சாலையில் ரூ. 134 கோடியில் 2,13,334 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களைக் கொண்ட நூலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
  • அனைத்துத் தளங்களும் குளிா்சாதன வசதி கொண்டதாகவும், சிறுவா்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான அடிப்படைத் தேவைகளுடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்தின் சிறப்பம்சங்கள்:
  • சிறுவர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. சுமார் 4.3 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.  
  • 6 மின்தூக்கிகள் (லிப்ட்), 6 தானியங்கிப் படிகள் (எஸ்கலேட்டர்), சுமார் 150 வாகனங்களை நிறுத்தும் வசதி அமைக்கப்பட்டுள்ளன.
  • மாற்றுத் திறனாளிகள் பிரிவு, மாநாட்டு அரங்கம், கலைக்கூடம் ஆகியவை தரைத் தளத்தில் அமைந்துள்ளன. 
  • முதல் தளத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படைப்புகள், அவர் குறித்து பிற அறிஞர்கள் எழுதிய நூல்கள் உள்ளன. 
  • இங்கு நூல்கள் அனைத்து டிடிசி எனப்படும் நூலக அறிவியல் முறைப்படி அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் தொடுதிரை மூலம் நூல்களைக் கண்டறியும் வசதியும் அமைக்கப்படுகிறது.
  •  இணையவழியில் புத்தகங்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதாக இந்தத் தொடுதிரைகள் அமைக்கப்படுகின்றன.
  • இந்த நூலகத்துக்கு 71 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 30 பணியாளர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து இங்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் 15 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 
  • மதுரையில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 15 மாலை திறந்துவைத்தார்

Post a Comment

0Comments

Post a Comment (0)