Tamil Nadu Chief Minister Talent Search Exam தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு 2023

TNPSC  Payilagam
By -
0
 


Tamil Nadu Chief Minister Talent Search Exam தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு

10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு அறிமுகம்.

"தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனறித்‌ தேர்வு" என்ற புதிய திட்டத்தையும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 05.04.2023  அன்று அறிவித்துள்ளார்.

இப்புதிய திட்டத்தின்‌ வாயிலாக பத்தாம்‌ வகுப்புப்‌ பயிலும்‌ 1000 மாணவர்கள்‌ தேர்வு செய்யப்பட்டு அவர்கள்‌ அனைவருக்கும்‌ பதினொன்றாம்‌, பண்ணிரெண்டாம்‌ வகுப்புகளை நிறைவு செய்யும்‌ வரை ஒவ்வொரு மாதமும்‌ ரூபாய்‌ 1000/- கல்வி உதவித்‌ தொகை வழங்கப்படும்‌.

மேலும்‌, இம்மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில்‌ தொடர்பயிற்சிகளும்‌ வழங்கப்படும்‌. இது மட்டுமல்லாமல்‌, இத்திட்டத்தில்‌ தெரிவு செய்யப்படும்‌ மாணவர்கள்‌ அவர்களுடைய உயர்கல்வியைத்‌ தொடரும்பொழுதும்‌ ஒவ்வோர்‌ ஆண்டும்‌ ரூ12,000/- வீதம்‌ கல்வி உதவித்‌ தொகை வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)