Tamil Nadu Government Schemes தமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்

TNPSC  Payilagam
By -
0


 

நோக்கம்

  • 104 தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவையை இதன் மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.

மருத்துவ சேவைகள்

  • பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள்
  • மருத்துவ ஆலோசனைகள்
  • தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள்
  • ரத்த தானம்
  • கண் தானம் பற்றிய தகவல்கள்
  • தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள்

ஊட்டச்சத்து குறித்த தகவல்கள்

  • முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.
  • குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.

திட்டங்கள்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களை கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் செயல்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)