ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம்
பொது சுகாதாரமும், நோய்த்தடுப்பும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக அம்மா ஆரோக்கிய திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிகிச்சை பிரிவுகள்
பின்வரும் பிரிவுகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இலவச மருந்துகள் வழங்கப்படுகின்றன.
- ரத்த அழுத்தம்
- பொது மருத்துவம்
- மகளிர் நலம்
- மகப்பேறு மருத்துவம்
- இலவச கண் அறுவை சிகிச்சை
- விழி லென்ஸ் பொருத்துதல்
- தோல் நோய்
- பல் மருத்துவம்
- சித்த வைத்தியம்
- ஸ்கேன் வசதி
- ஆய்வக வசதி
- இசிஜி வசதி
- எய்ட்ஸ் எச்.ஐ.வி. பரிசோதனை
- ஆலோசனை மையம்
- சர்க்கரை நோய் பிரிவு
சாதாரண ஏழை, எளிய மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பெருந்தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது. சாதாரண மக்களின் வாழ்வில் பொருளாதார பாதிப்பு ஏற்படாதிருக்கவும், மக்கள் நோயில்லா பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதய நோய், நீரழிவு நோய், புற்று நோய் போன்ற தொற்றா நோய்களின் பரிசோதனைக்கும் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.
செயல்படும் நாட்கள்
இந்தத் திட்டம் மருத்துவமனையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படுத்தப்படும்.
எதிர்கால திட்டங்கள்
பின்வரும் பொது சுகாதார நலன் குறித்த ஏராளமான திட்டங்கள் செயலாக்கம் பெற்று வருகிறது.
- கண்ணொளி காப்போம் திட்டம்
- டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்
- டெங்கு, சிக்குன்குனியா தடுப்பு திட்டம்
- கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்