TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்-நான்மணிக்கடிகை

TNPSC  Payilagam
By -
0


 

நான்மணிக்கடிகை

நூல் அமைப்பு :

பாடல்கள் = 2 + 104

பாவகை = வெண்பா

வேறு பெயர் -துண்டு

நான்மணிக்கடிகை 104 வெண்பாக்களால் ஆன நூலாகும்.

நான்மணிக்கடிகை பெயர்க்காரணம்

நான்கு + மணி + கடிகை = நான்மணிக் கடிகை

கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.

கடவுள் வாழ்த்து

முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.

ஆசிரியர் குறிப்பு

நூலாசிரியர் – விளம்பிநாகனார்

“விளம்பி” என்பது ஊர்ப்பெயர்

“நாகனார்” என்பது புலவரின் இயற்பெயர்


TNPSC EXAM KEY POINTS :

  1. பாடல் எண்ணிக்கை :2 + 104
  2. ஆசிரியர் : விளம்பி நாகனார்பாவகை : 
  3. வெண்பாஇயற்றப்பட்ட காலம் : நான்காம் நூற்றாண்டு
  4. நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
  5. கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை.
  6. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
  7. முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
  8. கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.
  9. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது
  10. நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
  11. ஜி.யு.போப் இந்நூலின் இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
  12. நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் 'நான்மணிக்கடிகை' என்று அழைக்கப்படுகிறது.

முக்கிய அடிகள்

  • “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
  • “இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
  • வெல்வது வேண்டின் வெகுளிவிடல்”
  • “இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்    வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்”
  • “ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்”
  • “மனைக்கு விளக்கம் மடவாள்
  • மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
  • புதல்வர்க்கு விளக்கம் கல்வி
  • கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு”

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)