TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்- இன்னா நாற்பது

TNPSC  Payilagam
By -
0

 

 பகுதி – (ஆ) – இலக்கியம்-  இன்னா நாற்பது


இன்னா நாற்பது

  • ஆசிரியர் = கபிலர்
  • பாடல்கள் = 1 + 40
  • பாவகை = வெண்பா
  • இன்னா = துன்பம்.
  • இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பது எனப்படுகிறது.

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார்.

பொதுவான குறிப்புகள் :

  • இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
  • கபிலரிடம் சைவ,வைணவ பேதம் இல்லை.
  • இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
  • மெல்லிய சில சொற்களால் தொகுக்கப்பட்டு அடியளவு குறைந்துள்ள செய்யுள் அம்மை எனப்படும்.சொல் அமைதியலோ, ஓசை அமைதியிலோ வருவதால் அம்மை எனப்பட்டது.
  • இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.

சங்க கால கபிலரும், இவரும் வேறு வேறு.

1. பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்.

2. இன்னா நாற்பது பாடிய கபிலர்.

3. பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்.

4. பன்னிரு பாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர்.

5. அகவற்பா பாடிய கபிலர்.


முக்கிய அடிகள்

1.“உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா”

உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம்.

2. “தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா”

தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும்.

3.“ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா”

உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும்.

4.“குழவிகள் உற்றபிணி இன்னா”

குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும்.

5.“ இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு”  

பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)