களவழி நாற்பதுகளவழி நாற்பது நூல் குறிப்பு:
- இந்த களவழி நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் உள்ள நூல் ஆகும். இந்நூல் புறப்பொருள் பற்றி கூறுகிறது. இந்நூலில் போர்க்களம் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
- இந்த களவழி நாற்பது நூலை இயற்றியவர் பொய்கையார் என்னும் தமிழ் புலவர் ஆவார். இந்த களவழி நாற்பது நூல் 40 பாடல்களை கொண்டுள்ளது. இந்நூலில் 2 திணைகள் இடம்பெற்றுள்ளன. அவை புறத்திணை மற்றும் வாகைத்திணை ஆகும்.
- இந்நூல் வெண்பா பாவகையினால் ஆனது. இந்நூல் போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் “களவழி நாற்பது” எனப் பெயர் பெற்றது. இந்நூலில் கார்த்திகைத் திருவிழா பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது.
- களவழி நாற்பதில் உள்ள நாற்பது பாடல்களும் ‘களத்து‘ என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிகிறது. இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.
- போர்க்களத்தில் இருக்கும் சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார்.
களவழி நாற்பது ஆசிரியர் குறிப்பு:
- களவழி நாற்பது நூலை இயற்றியவர் பொய்கையார் என்னும் தமிழ் புலவர் ஆவார். இவர் சங்க கால புலவர் என்று கூறப்பட்டுள்ள்ளது. இவர் இயற்றிய மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவர் பொய்கை என்னும் ஊரில் பிறந்ததால் இப்பெயர் வந்தது.
- இவர் சேர மன்னனுடைய நண்பன் ஆவார். போர்க்களத்தில் நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதியாகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கூறப்படுகிறது.
- இவர் இயற்றியுள்ள இந்நூல் மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் பற்றிக் கூறுகின்றன. இந்நூல் பண்டைத்தமிழரின் அரசியலையும், ஆட்சிமுறையையும், அவற்றில் இடம்பெற்றுள்ள களப்போர் நிகழ்வுகளையும் பொய்கையார் புலவர் விரிவாக கூறியுள்ளார்.
களவழி
- நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது ‘ஏரோர் களவழி’. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது ‘தேரோர் களவழி’ தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது. இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகிறது. கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.
போர்க்களம்
- போர் ‘திருப்போர்ப்புறம்|திருப்பூர்’ என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்
TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்- களவழி நாற்பது
By -
July 28, 2023
0
Tags: