TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்- திணைமாலை நூற்றைம்பது

TNPSC  Payilagam
By -
0

 

பகுதி – (ஆ) – இலக்கியம்- திணைமாலை நூற்றைம்பது


திணைமாலை நூற்றைம்பது

  • ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார்
  • ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன
  • அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
  • திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது.
  • இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது
  • வரதட்சனை வாங்குவது தவறு என்று கூறும் நூல்
  • குறிஞ்சி = 1 தொடக்கம் 31 வரை = 31 பாடல்கள்
  • நெய்தல் = 32 தொடக்கம் 62 வரை = 31 பாடல்கள்
  • பாலை = 63 தொடக்கம் 92 வரை = 30 பாடல்கள்
  • முல்லை = 93 தொடக்கம் 123 வரை = 31 பாடல்கள்
  • மருதம் = 124 தொடக்கம் 153 வரை = 30 பாடல்கள்

பெயர்க்காரணம்

திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்

  1. நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
  2. இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
  3. இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
  4. பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
  5. இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் காணமுடிகிறது.
  6. நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
  7. மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை
முக்கிய அடிகள்

  • ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
  • இருகடரும் போந்தன என்றார்
  • பொருள் பொருள் என்றால் சொல்
  • பொன்போலப் போற்றி
  • அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
  • வளமை கொணரும் வகையினால் மற்றோர்
  • இளமை கொணர இசை
  • நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட
  • கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை
  • அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு
  • என்னையோ? நாளை எளிது
  • பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
  • மாலையாழ் ஓதி வருடாயோ? – காலையாழ்
  • செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
  • நையும் இடமறிந்து நாடு

 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)