TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்- நாலடியார்

TNPSC  Payilagam
By -
0


 

நாலடியார்

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது நானூறு வெண்பாக்களால் ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

KEY POINTS TNPSC EXAM:

  1. திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.
  2. இது ‘நாலடி நானூறு’ எனவும் அழைக்கப்படுகிறது.
  3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள "ஒரே தொகை நூல்" நாலடியார் ஆகும்.
  4. ஆசிரியர் : சமண முனிவர்களால் பா வகை : வெண்பாபாடல் எண்ணிக்கை : 400
  5. 40 அதிகாரங்களைக் கொண்டது, (அதிகாரத்தத்துக்கு பத்து பாடல்கள் வீதம் 400 பாடல்களைக் கொண்டது)
  6. இயற்றப்பட்ட காலம் : (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்)
  7. வேறு பெயர்கள்:  நாலடி நானூறு,வேளாண் வேதம்
  8. திருக்குறளைப் போன்றே முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
  9. அறத்துப்பால் : 13 பொருட்பால் : 24 காமத்துப்பால் : 3
  10. நூலிற்கு உரை கண்டவர்:  தருமர்;பதுமனார்
  11. நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
  12. ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்


நூலின் பெருமையை கூறும் அடிகள்:

 "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி  
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி",

“நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் வரும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.


மேற்கோள்கள்:

1."கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. ”
2.“ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
பால்உண் குருகின் தெரிந்து”
3.“கல்வி அழகே அழகு”

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)