பொதுத்தமிழ் - இலக்கணம் பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்:
1. சந்திப்பிழை திருத்தி எழுதுதல்2. மரபுப்பிழை நீக்கி எழுதுதல்
3. வழூஉச் சொல் நீக்கி எழுதுதல்
4. வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்
5. ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்
மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் அமையும். இவற்றை ஒருமுறை ஆழ்ந்து படித்தால் மனதில் நின்றுவிடும்.ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு வினா என் ஐந்து வினாக்கள் கேட்கப்படலாம்.
1.சந்திப்பிழை நீக்கி எழுதுதல்
எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால், எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம்.
வல்லினம் மிகும் இடங்கள்
1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
(எ.கா)அந்தத் தோட்டம்
இந்தக் கிணறு
எந்தத் தொழில்
அப்படிச் செய்தான்
இப்படிக் கூறினான்
எப்படிப் பார்ப்போம்
2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும். (எ.கா)பொருளைத் தேடினான்
புத்தகத்தைப் படித்தான்
ஊருக்குச் சென்றான்
தோழனுக்குக் கொடு
3. ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின் வல்லினம் ஆகும்.
(எ.கா)படிப்பதாகச் சொன்னார்
போய்ச் சேர்ந்தான்
--------------------------------------------------------------------------------------------------------------
4. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வல்லினம் ஆகும்.
(எ.கா)சாலப் பேசினான்
தவச் சிறிது
5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.
(எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி
6. ஒரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின்பகும்.
(எ.கா)தைப்பாவை
தீச்சுடர்
7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.
(எ.கா)ஓடாப்புலி, வளையாச் சொல்
----------------------------------------------------------------------------------------------------------
8. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
(எ.கா)பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
------------------------------------------------------------------------------------------------------------
9. முற்றியலுகர சொற்களின் பின் வல்லினம் மிகும்
(எ.கா)திருக்குறள், பொதுச்சொத்து
-----------------------------------------------------------------------------------------------------------
10. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
(எ.கா)மழைக்காலம், பனித்துளி
1. வினைத்தொகையில் வில்லினம் மிகாது
(எ.கா)விரிசுடர், பாய்புலி
2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
(எ.கா)காய்கனி, தாய்தந்தை
3. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது
(எ.கா)தமிழ் கற்றார், கதை சொன்னார்.
4. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது
(எ.கா)கற்க கசடற, வாழ்க தமிழ்
5. விளித்தொடரில் வலி மிகாது
(எ.கா)கண்ணா பாடு, அண்ணா பாடு
6. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களுக்குப்பின் வலி மிகாது...
(எ.கா)அத்தனை பழங்கள், இத்தனை பழங்கள், எத்தனை கால்கள்
7. இரட்டைக் கிளவியிலும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது.
(எ.கா)கலகல, பாம்பு பாம்பு
8. அவை இவை எனும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
(எ.கா)அவை சென்றன, இவை செய்தன
9. அது இது எனும் எட்டுச் சொற்களின் பின் வலி மிகாது
(எ.கா)அது பிறந்தது, இது கடித்தது
10. எது, அது எனும் வினைச்சொற்களின் பின் வலி மிகாது
(எ.கா)எது பறந்தது, யாது தந்தார்
உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன?
ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அவற்றை விளக்கும் பயனும் மறைந்து வருவது உடனும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
(எ.கா)
நீர்க்குடம்
அதாவது நீரை உடைய குடம்.இதில் 'ஐ' என்னும் 2 ம் வே.உருபும் 'உடைய' என அதை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
நீர்க்குடம் | -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
மட்பானை | -மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
கூலிவேலை | -நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
தொட்டித் தண்ணீர் | -ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
வீட்டுப்பூனை | -ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
ஆறாம் வேற்றுமைத் தொகையில் பயன் தரும் சொல் மறைந்து வருவதில்லை.
பறவைகள் | விலங்குகள் |
---|---|
ஆந்தை - அலறும் | நாய் - குரைக்கும் |
கோழி - கொக்கரிக்கும் | நரி - ஊளையிடும் |
குயில் - கூவும் | குதிரை- கனைக்கும் |
காகம் - கரையும் | கழுதை - கத்தும் |
கிளி - கொஞ்சும் | பன்றி - உறுமும் |
மயில் - அகவும் | சிங்கம் - முழங்கும் |
கோட்டான் - குழலும் | பசு - கதறும் |
வாத்து - கத்தும் | எருது - எக்காளமிடும் |
வானம்பாடி - பாடும் | எலி - கீச்சிடும் |
குருவி - கீச்சிடும் | தவளை - கத்தும் |
வண்டு - முரலும் | குரங்கு - அலம்பும் |
சேவல் - கூவும் | பாம்பு - சீறிடும் |
கூகை - குழலும் | யானை - பிளிரும் |
புறா - குனுகும் | பல்லி - சொல்லும் |
------------------------------------------------------------------------------------------------------------
பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்
புலிப்பரள்
சிங்கக்குருளை
பூனைக்குட்டி
எலிக்குஞ்சு
நாளிணிக்குட்டி
கோழிக்குஞ்சு
குதிரைக்குட்டி
கீரப்பிள்ளை
கழுதைக்குட்டி
மான்கன்று
ஆட்டுக்குட்டி
யானைக்கன்று
பன்றிக்குட்டி
-------------------------------------------------------------------------------------------
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்
முருங்கைக்கீரை
தாழைமடல்
தென்னங்கீற்று
வாழையிலை
பனையோலை
வேப்பந்தழை
மாவிலை
மூங்கில் இலை
நெல்தாள்
பூந்தோட்டம்
மாந்தோப்பு
வாழைத்தோட்டம்
தேயிலைத் தோட்டம்
சோளக்கொல்லை
சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு
பனங்காடு
வேலங்காடு
------------------------------------------------------------------------------------------------
மாடு - மந்தை
எறும்பு - சாரை
கல் - குவியல்
சாவி - கொத்து
திராட்சை - குலை
பசு - நிரை
யானை - கூட்டம்
வீரர் - படை
வைக்கோல்- போர்
விறகு - கட்டு
மக்கள் - தொகுப்பு
வழுஉச்சொல் | தமிழ்சொல் |
---|---|
உசிர் | உயிர் |
ஊரளி | ஊருளி |
ஒருத்தன் | ஒருவன் |
கடகால் | கடைக்கால் |
குடக்கூலி | குடிக்கூலி |
முயற்சித்தார் | முயன்றார் |
வண்ணத்திப்பூச்சி | வண்ணத்துப்பூச்சி |
வென்னீர் | வெந்நீர் |
எண்ணை | எணணெய் |
சிகப்பு | சிவப்பு |
தாவாரம் | தாழ்வாரம் |
புண்ணாக்கு | பிண்ணாக்கு |
கோர்வை | கோவை |
வலது பக்கம் | வலப்பக்கம் |
பேரன் | பெயரன் |
பேத்தி | பெயர்த்தி |
தலகாணி | தலையணை |
வேர்வை | வியர்வை |
சீயக்காய் | சிகைக்காய் |
சுவற்றில் | சுவரில் |
இருபல் | இருமல் |
அருவாமனை | அரிவாள்மனை |
அண்ணாக்கவுரு | அரைநாண்கயிறு |
புஞ்சை | புன்செய் |
புண்ணாக்கு | பிண்ணாக்கு |
நாத்தம் | நாற்றம் |
பதனி | பதிநீர் |
அருகாமை | அருகில் |
வெங்கலம் | வெண்கலம் |
பேட்டி | நேர்காணல் |
வெண்ணை | வெண்ணெய் |
ஒத்தடம் | ஒற்றடம் |
தேனீர் | தேநீர் |
கவுறு | கயிறு |
பயிறு | பயறு |
பாவக்காய் | பாகற்காய் |
ரொம்ப | நிரம்ப |
கோடாலி | கோடாரி |
கடப்பாறை | கடப்பாரை |
ஆம்பளை | ஆண்பிள்ளை |
ஈர்கோலி | ஈர்கொல்லி |
அவரக்கா | அவரைக்காய் |
---------------------------------------------------------------------------------------------------------------
4.வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்வேற்றுமொழிச்சொல் | தமிழ்ச்சொல் |
---|---|
பஜனை | கூட்டுவழிபாடு |
வைத்தியர் | மருத்துவர் |
ஜனம் | மக்கள் |
கர்வம் | செருக்கு |
வாபாஸ் | திரும்பபெறுதல் |
தபால் | அஞ்சல் |
கிஸ்தி | வரி |
அலமாரி | நெடும்பேழை |
முண்டாசு | தலைப்பாகை |
சிம்மாசனம் | அரியணை |
அகங்காரம் | ஆணவம் |
பஜார் | கடைத்தெரு |
சாதம் | சோறு |
சபை | அவை |
நாஷ்டா | சிற்றுண்டி |
ஆசீர்வாதம் | வாழ்த்து |
நமஸ்காரம் | வணக்கம் |
லாபம் | ஈவு |
இஷ்டம் | விருப்பம் |
வக்கீல் | வழக்குரைஞர் |
தராசு | துலாக்கோல் |
ஹாஸ்டல் | விடுதி |
சர்க்கார் | அரசு |
கேப்பை | கேழ்வரகு |
ஐதீகம் | சடங்கு |
வேதம் | மறை |
ஜானவாசம் | மாப்பிளை அழைப்பு |
அபிஷேகம் | திருமுழுக்கு |
யாத்திரை | புனிதப் பயணம் |
ஆயுள் | வாழ்நாள் |
தீர்த்தம் | புனித நீர் |
ஜனநாயகம் | குடியாட்சி |
நதி | ஆறு |
சந்தா | கட்டணம் |
பிரதிநிதி | சார்பாளர் |
பத்திரம் | ஆவணம் |
மத்தியாணம் | நண்பகல் |
சிபாரிசு | பரிந்துரை |
பரீட்சை | தேர்வு |
பிரார்த்தனை | தொழுகை |
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் | நடுவண் அரசு |
தாலுகா ஆபிஸ் | வட்டாட்சியர் அலுவலகம் |
5. ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்
இது ஒரு எளிய வகை வினா, தேர்வரின் தமிழறிவை சோதிக்கும் வண்ணம் , வாக்கியங்களில் வரும் ஒருமை/பன்மை (singular/flural) வேறுபாடுகளை கண்டறியும் திறனை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.
உதாரணம் : ஒருமை/பன்மை பிழைகளைக் கண்டறிக ?
அ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர்
ஆ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றார்கள்
இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது
ஈ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றன.
விடை : இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது( தமிழ்நாடு என்ற பெயர் ஒருமையில் வந்ததால் வென்றது என்பது ருமையிலேயே வர வேண்டும்.)
ஒருமை - பன்மை பிழைகளை நீக்குதல்