- அகநானூறு- அகம்+நானூறு
- அகந்தூய்மை - அகம்+துய்மை
- அங்கயற்கண் - அம்+கயல்+கண்
- அமைந்திருந்தது - அமைந்து+இருந்தது
- அலகிலா - அலகு + இலா
- அல்லாவருக்கும் - அல்லாவர்+ஊக்கும்
- அழகாடை - அழகு+ஆடை
- அறிவுண்டாக- அறிவு + உண்டாக
- அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா
- அன்பீனும் - அன்பு + ஈனும்
- ஆட்டம் - ஆடு + அம்
- ஆயிடை - ஆ+இடை
- ஆருயிர்-அருமை+உயிர்
- இங்கேயிரு - இங்கே+இரு
- இங்கொன்றும் - இங்கு+ஒன்றும்
- இணரூழ்த்தும் - இணர்+ஊழ்த்தும்
- இயல்பீராறு- இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
- இலரெனினும் - இலர்+எனினும்
- இல்லதணின் - இல்+அதனின்
- இவனிறைவன் - இவன் +இறைவன்
- இழந்தோமென்றல்லாவர் - இழந்தோம்+என்று+அல்லாவர்
- இளங்கனி = இளமை + கனி
- இளிவன்று - இளிவு+அன்று
- இறந்தாரணையர் - இறந்தார்+அணையர்
- இரப்பார்க்கொன்றிவர் - இரப்பார்க்கு+ஒன்று+ஈவார்
- இன்னிசை - இனிமை+இசை
- ஈண்டிவரே - ஈண்டு+இவரே
- ஈண்டினியான்- ஈண்டு + இனி + யான்
- ஈதலிசைபட- ஈதல்+இசைபட
- ஈந்தளிப்பாய் - ஈந்து+அளிப்பாய்
- ஈன்றெடுத்த - ஈன்று+எடுத்த
- உடைத்தன்று - உடைத்து+அன்று
- உடையதுடையாரை - உடையது+உடையாரை
- உணர்ச்சி - உணர் + சி
- உண்டென்று - உண்டு + என்று
- உரையதனை - உரை+அதனை
- உலகறிய - உலகு+அறிய
- ஊக்கமுடையான் - ஊக்கம்+உடையான்
- ஊர்புறம் - ஊர்+புறம்
- எமதென்று- எமது + என்று
- எழுந்தெதிர்- எழுந்து + எதிர்
- எனக்கிடர் - எனக்கு + இடர்
- எனைத்தொன்றும் - எனைத்து+ஒன்றும்
- என்டிசை - எட்டு+திசை
- ஒல்காருரவோர் - ஒல்கார்+உரவோர்
- ஓய்வூதியம் - ஓய்வு+ஊதியம்
- ஓரெழுத்து - ஒன்று + எழுத்து
- கண்ணருவி = கண் + அருவி
- கடலலை - கடல்+அலை
- கடலோரம் - கடல்+ஒரம்
- கடும்பசி - கடும்+பசி
- கணக்கிழந்த - கணக்கு+இழந்த
- கயற்கண்ணி - கயல்+கண்ணி
- கரவிலா - கரவு+இலா
- கருமுகில்- கருமை + முகில்
- கரைவரலேறு - கரை+விரல்+ஏறு
- கவியரசர் - கவி+அரசர்
- காட்டிலழும் - காட்டில்+அழும்
- காட்டுமரங்கள் - காடு+மரங்கள்
- காடிதனை- காடு + இதனை
- காண்டகு- காண் + தகு
- காத்தோலம்பல் - காத்து+ஓம்பல்
- காரிருள் - கார்+இருள்
- காலமறிந்தாங்கு - காலம்+அறிந்து+ஆங்கு
- குமின்சிரிப்பு - குமின்+சிரிப்பு
- குலவுமெழில் - குலவும்+எழில்
- குழற்காடேந்துமிள - குழல்+காடு+எந்தம்+இள
- குறுங்காவியம் - குறுமை+காவியம்
- குறுந்தொகை - குறுமை+தொகை
- குறைவிலை - குறைவு+இல்லை
- குற்றேவல் - குறுமை+ஏவல்
- கேளானை - கேள் + ஆனை
- கொங்கலர்ந்தார் - கொங்கு+அலர்+தார்
- கோட்பாடு - கோள் + பாடு
- கொட்பின்றி - கொட்பு+இன்றி
- கொலை - கொல் + ஐ
- கோயில் - கோ+இல்
- கோலப்பூங்கூடை - கோலம்+பூ+கூடை
- கோடல் - கோடு + அல்
- கோலையூன்றி - கோலை+ஊன்றி
- கோற்பாகர் - கோல்+பாகர்
- சரணல்லால் - சரண்+அல்லால்
- சாக்காடு - சா + காடு
- சிற்றோர் - சிறுமை+ஊர்
- சீறடி - சிறுமை+அடி
- சுவையுணரா - சுவை + உணரா
- செங்கோலம் - செம்மை+கோலம்
- செய்யுள் - செய் + உள்
- செற்றன்று - செற்று+அன்று
- சேணுறைதல் - சேண்+உறைதல்
- சேவடி- செம்மை + அடி
- சொற்பொருத்தி - சொல்+பொருத்தி
- சோர்விலான் - சோர்வு+இலன்
- தங்கால் - தம்+கால்
- தந்தம் - தம்+தம்
- தமக்குரியர் - தமக்கு + உரியர்
- தவமிரண்டும் - தவம்+இரண்டும்
- தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று
- தாமுள -தாம் + உள
- தாப்பிசை - தாம்பு + இசை
- தாயுள்ளம் - தாய்+உள்ளம்
- தாழ்வின்றி - தாழ்வு+இன்றி
- தானல்லதொன்று - தான்+அல்லது+ஒன்று
- திருவினையாக்கும் - திருவினை+ஆக்கும்
- திறனறிந்த - திறன்+அறிந்து
- தீந்தமிழ் - தீம்+தமிழ்
- தேர்ந்தெடுத்து - தேர்ந்து+எடுத்து
- தொழிற்கல்வி - தொழில்+கல்வி
- தொழுதேத்தி - தொழுது + ஏத்தி
- தோற்றரவு - தோற்று + அரவு
- நடவாமை - நட+ ஆ + மை
- நல்லறம்- நன்மை + அறம்
- நறுஞ்சுவை - நறுமை+சுவை
- நன்கணியர் - நன்கு + அணியர்
- நன்மொழி - நன்மை + மொழி
- நாத்தொலைவில்லை- நா + தொலைவு + இல்லை;
- நிலத்தறைந்தான் - நிலத்து+அறைந்தான்
- நிழலருமை - நிழல் + அருமை
- நீரவர் - நீர்+அவர்
- நீர்த்தவளை - நீர்+தவளை
- நூற்றாண்டு - நூறு+ஆண்டு
- நெடுமரம் - நெடுமை+மரம்
- பணமாயிரம் - பணம்+ஆயிரம்
- பண்பிலுயர் - பண்பில்+உயர்
- பல்பொருணிங்கிய - பல்+பொருள்+நீங்கிய
- பறவை - பற + வை
- பாடுன்றும் - பாடு+ஊன்றும்
- பாய்தோடும் - பாய்ந்து + ஒடும்
- பாவினம் - பா+இனம்
- பிணிநோயுற்றோர்- பிணி + நோய் + உற்றோர்
- புலவி - புல + வி
- புளிப்பு - புளி + பு
- புறநானூறு- புறம்+ நான்கு+ நூறு
- பூட்டுமின்- பூட்டு + மின்
- பூம்பினல் - பூ+பினல்
- பெறுதல் - பெறு + தல்
- பேரண்டம் - பெருமை+அண்டம்
- பேரூர் - பெருமை+ஊர்
- பைங்கிளி - பசுமை+கிளி
- பொருளுமைமை - பொருள்+உமைமை
- பொற்கோட்டுமேறு - பொன்+கோட்டு+மேறு
- போக்கு - போ + கு
- போன்றிருந்தேனே - போன்றி+இருந்தேனே
- மக்களொப்பன்று - மக்கள்+ஒப்பு+அன்று
- மட்கலத்துள் - மண்+கலத்து+உள்
- மரவேர்- மரம்+வேர்
- மருப்பூசி- மருப்பு + ஊசி
- மலர்ச்சோலை- மலர்+சோலை
- மறதி - மற + தி
- மார்போலை- மார்பு + ஓலை
- மொய்யிலை- மொய் + இலை
- வன்பாற்கன் - வன்பால் + கண்
- வாயினராதல் - வாயினர்+ஆதல்
- வாயினீர்- வாயின் + நீர்
- வரவு - வர + உ
- வாயுணர்வு - வாய் + உணர்வு
- வாழ்க்கை - வாழ் + கை
- வாழ்த்தாதென்னே - வாழ்த்தாது+என்னே
- விரைந்தசையும் - விரைந்து+அசையும்
- விளங்கிற்றங்கே - விளங்கிற்று+அங்கே
- விளையாட்டுடையார் -விளையாட்டு+ உடையார்
- வீழ்ந்த்திங்கே - வீழ்ந்தது+இங்கே
- வெஞ்சுரம் - வெம்மை+சுரம்
- வெண்மதி- வெண்மை + மதி
- வெந்துலர்ந்து- வெந்து + உலர்ந்து.
- வெவ்விருப்பாணி- வெம்மை+இரும்பு+ஆணி
- வெவ்விறகு - வெம்மை+விறகு
- வெள்வாய் - வெண்மை+வாய்
- வெள்ளத்தனைய - வெள்ளம்+அத்து+அனைய
- வைத்திழந்தான் - வைத்து+இழந்தான்
TNPSC ILAKKANAM TAMIL NOTES -இலக்கணம் -பிரித்தெழுதுக
By -
July 17, 2023
0
Tags: