ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் என்பது வினாத்தாள்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுவைத்து ஆகும்
தேர்விற்கு பயன்படும் வகையில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன
அட்டவணை-I
ஆங்கிலச் சொற்கள் | தமிழ் சொற்கள் |
Accident | நேர்ச்சி |
Acknowledgement Card | ஒப்புகை அட்டை |
Admission | சேர்க்கை |
Agency | முகவாண்மை |
Agent | முகவர் |
Allergy | ஒவ்வாமை |
Assurance | காப்பீடு |
Attendance Register | வருகைப் பதிவேடு |
Attestation | சான்றொப்பம் |
Automobile | தானியங்கி |
Bench | விசிப்பலகை |
Binding | கட்டமைப்பு |
Bona fide certificate | ஆளறி சான்றிதழ் |
Brass | பித்தளை |
Bronze | வெண்கலம் |
Bio Technology | உயிரி தொழில்நுட்பவியல் |
Casting | வார்ப்பு |
Central Government | நடுவண் அரசு |
chalk piece | சுண்ணக்கட்டி |
Champion | வாகை சூடி |
Code | குறிப்புகள் |
Company | குழுமம் |
Compound | கூட்டுப் பொருட்கள் |
Compounder | மருந்தாளுநர் |
Deposit | இட்டு வைப்பு |
Design | வடிவமைப்பு |
Document | ஆவணம் |
மின்னஞ்சல் | |
Ever silver | நிலைவெள்ளி |
Evidence Act | சட்ட ஆவணங்கள் |
Fax | தொலை நகலி |
Fiction | புனைக்கதை |
Hardness | கடினத்தன்மை |
Insurance | ஈட்டுறுதி |
Interview | நேர்காணல் |
Inorganic | கனிமம் |
Irregular | ஒழுங்கற்ற |
Key | திறவுகோல் |
Keyboard | விசைப்பலகை |
Knight hood | வீரத்திருத்தகை |
Laptop | மடிக்கணினி |
License | உரிமம் |
Lift | மின்தூக்கி |
Lorry | சரக்குந்து |
Mammal | பாலூட்டி |
Metal | உலோகம் |
Missile | ஏவுகணை |
Mortuary | பிணக்கிடங்கு |
Network | வலையகம் |
Organic | கரிமம் |
Offspring | சந்ததி |
Passport | கடவுச்சீட்டு |
Password | கடவுச் சொல் |
Permanent | நிரந்தரம் |
Photo Graph | நிழற்படம் |
Photocopy (Xerox) | ஒளிப்படி |
Planet | கோள் |
Plastic | நெகிழி |
Print out | அச்சுப் படி |
Probationary Period | தகுதிகாண் பருவம் |
Proposal | கருத்துரு |
Receiver | அலை வாங்கி |
Radio wave | வானொலி அலை |
Remote Sensing | தொலை உணர்தல் |
Research Centre | ஆராய்ச்சி நிலையம் |
Satellite | செயற்கைக்கோள் |
Scanning | வரிக் கண்ணோட்டம் |
Search Engine | தேடுபொறி |
Substantive Law | சான்றுச் சட்டம் |
Succession Act | உரிமைச் சட்டங்கள் |
TeaStall | தேனீர் அங்காடி |
Technical | தொழில்நுட்பம் |
Tele Print | தொலை அச்சு |
Telex | தொலை வரி |
Temporary | தற்காலிகம் |
Temperature | வெப்ப நிலை |
Traitor | துரோகி |
Ultra Sound Scanning | மீயொலி வரிக் கண்ணோட்டம் |
Visa | நுழைவு இசைவு |
Visiting card | காண்புச்சீட்டு |
Writs | வாரிசுரிமைச் சட்டம் |
அட்டவணை-II
ஆங்கிலச் சொற்கள் | தமிழ் சொற்கள் | |
ஃபிளாஷ் நியூஸ் | சிறப்புச் செய்தி | |
ஃபுட் போர்டு | படிக்கட்டு | |
ஃபேக்நியூஸ் | பொய்ச்செய்தி | |
ஃபேன் | மின்விசிறி | |
ஃபோலியோஎண் | இதழ் எண் | |
அகாதெமி | கழகம் | |
அசெம்ளி | சட்டசபை | |
அட்டெண்டன்ஸ் | வருகைப்பதிவு | |
அட்மிஷன் | சேர்க்கை | |
அட்லஸ் | நிலப்படச்சுவடி | |
அட்லஸ் | நிலப்படத்தொகுப்பு | |
அடாப்டர் | பொருத்தி | |
அப்பாயின்ட் மென்ட் | பணிஅமர்த்தல் | |
அஸ்ட்ரோநோமி | வானநூல் | |
அஸ்தெடிக் | இயற்கை வனப்பு | |
ஆக்ஸிடென்ட் | நேர்ச்சி | |
ஆட்டோகிராப் | வாழ்த்தொப்பம் | |
ஆட்டோமொபைல் | தானியங்கி | |
ஆடியோகேசட் | ஒலிப்பேழை | |
ஆபிஸ் | அலுவலகம் | |
ஆயில் ஸ்டோர் | எண்ணெய்ப் பண்டகம் | |
ஆர்டர் ஆஃப் நேச்சர் | இயற்கை ஒழுங்கு | |
ஆஸ்பத்திரி | மருத்துவமனை | |
இண்டர்வ்யூ | நேர்காணல் | |
இண்டஸ்ட்ரி | தொழிலகம் | |
இம்ப்ரூ | பெருக்கு | |
இன்டர்நெட் | இணையம் | |
எடிட்டோரியல் | தலையங்கம் | |
எவர்சில்வர் | நிலைவெள்ளி | |
என்வெரான்மென்ட் | சுற்றுச்சூழல் | |
எஸ்டிமேட் | மதிப்பீடு | |
ஏரோப்ளேன் | வானூர்தி | |
ஏஜென்சி | முகவாண்மை | |
ஏஜென்ட் | முகவர் | |
ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட் | ஆளறி சான்றிதழ் | |
ஐஸ்- கிரீம் | பனிக்குழைவு | |
ஐஸ்வாட்டர் | குளிர்நீர் | |
ஒன்வே | ஒருவழிப்பாதை | |
ஓட்டல் | உணவகம் | |
கண்ட்ரி | நாடு | |
கண்ட்ரோல் | கட்டுப்பாடு | |
கம்ப்யூட்டர் | கணினி | |
கம்பெனி | குழுமம் | |
கரண்ட் | மின்சாரம் | |
கரஸ்பாண்டேன்ட் | தாளாளர் | |
கலெக்டர் | சேகரிப்பவர் | |
கவர் | மறை உறை | |
கவுன்சில் | குழு | |
கவுன்சில் | மன்றம் | |
காண்ட்ரக்ட் | ஒப்பந்தம் | |
காபி பார் | குளம்பியகம் | |
காம்பாக்ட் டிஸ்க் | வட்டத்தகடு | |
கார் | மகிழுந்து | |
காலேஜ் | கல்லூரி | |
காஸ்ட்யூம் | உடை | |
கிரீடம் | மணிமுடி | |
கிரீன் ப்ரூஃ | திருத்தப்படாத அச்சுப்படி | |
கிரீன் ரூம் | பாசறை | |
கிரைண்டர் | அரவை இயந்திரம் | |
கிளாசிக்கல் லாங்குவேஜ் | உயர்தனிச் செம்மொழி | |
கிளாத் ஸ்டோர்ஸ் | துணியங்காடி | |
கூல் டிரிங்ஸ் | குளிர்பருகு நீர் | |
கூல்ட்ரிங்க்ஸ் | குளிர்பானம் | |
கெலிகாப்டர் | உலங்கு வானூர்தி | |
கெஸ்ட் கவுஸ் | விருந்தகம் | |
கேபிள் | கம்பிவடம் | |
கேரண்டி | பொறுப்புறுதி | |
கோட்டல் | உணவகம் | |
கோர்ட் | மன்றம் | |
சக்சஸ் | வெற்றி | |
சட்ஜ்மெண்ட் | தீர்ப்பு | |
சயின்ஸ் | அறிவியல் | |
சர்ஜரி | அறுவைச் சிகிச்சை | |
சாக்பீஸ | சுன்னக்கட்டி | |
சாம்பியன் | வாகை சூடி | |
சிட்டி | நகரம் | |
சிலிண்டர் | உருளை | |
சினிமா | திரைப்படம் | |
சுவிட்சு | பொத்தான் | |
சூப்பர் | சிறப்பு | |
செக் | காசோலை | |
செல்போன் | கைப்பேசி | |
சென்ட்ரல் கவர்ன்மென்ட் | நடுவன் அரசு | |
சேர் | நாற்காலி | |
சேலான் | செலுத்துச்சீட்டு | |
சைக்கிள் | மிதிவண்டி | |
ட்ராவலர்ஸ் பங்களா | பயணியர் மாளிகை | |
டாக்டர் | மருத்துவர் | |
டிக்கெட் | பயணச்சீட்டு | |
டிசிப்ளின் | ஒழுக்கம் | |
டிசைன் | வடிவமைப்பு | |
டிபன் | சிற்றுண்டி | |
டிபார்ட்மெண்டல் ஸ்டோர் | பல்பொருள் அங்காடி | |
டிமாண்ட் டிராப்ட் | வரைவோலை | |
டிவி | தொலைக்காட்சி | |
டிஸ்க் | குறுந்தகடு | |
டீ | தேநீர் | |
டீ பார்ட்டி | தேநீர் விருந்து | |
டீ ஸ்டால் | தேநீர் அங்காடி | |
டீப் போர் வெல் | ஆழ்துளைக் கிணறு | |
டெட்லைன் | குறித்தகாலம் | |
டெய்லி | அன்றாடம் | |
டெலஸ்கோப் | தொலைநோக்கி | |
டெலிபோன் | தொலைபேசி | |
டைப்பிஸ்ட | தட்டச்சர் | |
டைப்ரைட்டர் | தட்டச்சுப்பொறி | |
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் | தட்டெழுத்துப் பயிலகம் | |
டைரி | நாட்குறிப்பு | |
தம்ளர் | குவளை | |
தியேட்டர் | திரை அரங்கு | |
தெர்மா மீட்டர் | வெப்பமானி | |
நம்பர் | எண் | |
நாலெட்ஜ் | அறிவு | |
நிபுணர் | வல்லுநர் | |
நோட்புக் | குறிப்பேடு | |
பயாலாஜி | உயிரியல் | |
பர்னிச்சர் | அறைக்கலன்கள் | |
பர்ஸ்ட் கிளாஸ் | முதல் வகுப்பு | |
ப்ரீப்கேஸ் | குறும்பெட்டி | |
ப்ரீவ் கேஸ் | குறும்பெட்டி | |
ப்ரொஜெக்டர் | படவீழ்த்தி | |
பல்பு | மின்குமிழ் | |
பஸ் | பேருந்து | |
பஸ் ஸ்டாண்டு | பேருந்து நிலையம் | |
பஸ் ஸ்டாப் | பேருந்து நிறுத்தம் | |
பாய்லர் | கொதிகலன் | |
பார்லிமென்ட் | நாடாளுமன்றம் | |
பால்கனி | முகப்பு மாடம் | |
பாஸ்போர்ட் | கடவுச்சீட்டு | |
பிக்னிக் | சிற்றுலா | |
பிரிசன் | சிறைச்சாலை | |
பிரிட்ஜ் | குளிர்சாதனப்பெட்டி | |
பிரிண்டிங் பிரஸ் | அச்சகம் | |
பிளாட்பாரம் | நடைபாதை | |
பிளாஸ்டிக் | நெகிழி | |
பிளே கிரவுண்ட் | விளையாட்டுத்திடல் | |
பிளைட் | விமானம் | |
பீரோ | இழுப்பறை | |
புரபோசல் | கருத்துரு | |
புரோட்டோகால் | மரபுத் தகவு | |
புரோநோட் | ஒப்புச்சீட்டு | |
புல்லட்டின் | சிறப்புச் செய்தி இதழ் | |
பெல்ட் | அரைக்கச்சு | |
பேக்கர் | ரொட்டி சுடுபவர் | |
பேக்கிங் சார்ஜ் | கட்டுமானத்தொகை | |
பேங்க் | வங்கி | |
பேட்மிட்டன் | பூப்பந்து | |
பேரண்ட்ஸ் | பெற்றோர் | |
பேனா | தூவல் | |
பைக் | விசையுந்து | |
பைல் | கோப்பு | |
போலீஸ் ஸ்டேசன் | காவல் நிலையம் | |
போனஸ் | மகிழ்வூதியம் | |
போஸ்ட் ஆபிஸ் | அஞ்சல் நிலையம் | |
மதர்லேண்ட் | தாயகம் | |
மார்க்கெட் | அங்காடி | |
மீட்டிங் | கூட்டம் | |
மெஸ் | உணவகம் | |
மேஜிக் | செப்பிடுவித்தை | |
மைக் | ஒலிவாங்கி | |
மைக்ராஸ்கோப் | நுண்ணோக்கி | |
மோட்டல் | பயணவழி உணவகம் | |
யுனிவர்சிட்டி | பல்கலைகழகம் | |
ரப்பர் | தேய்ப்பம் | |
ரயில் | தொடர்வண்டி | |
ராக்கெட் | ஏவுகணை | |
ரிப்பைரர் | பழுதுபார்ப்பவர் | |
ரிவர் | நதி | |
ரிஜிஸ்டர் போஸ்ட் | பதிவு அஞ்சல் | |
ரூம் ரெண்ட் | குடிக்கூலி | |
ரெக்கார்ட் | ஆவணம் | |
ரேடியோ | வானொலி | |
ரோடு | சாலை | |
லாண்டரி | வெளுப்பகம் | |
லாரி | சரக்குந்து | |
லிவ்வர் | கல்லீரல் | |
லீவ்லெட்டர் | விடுமுறை கடிதம் | |
லெமினே~ன் | மென்தகடு | |
லே அவுட் | செய்தித்தாள் வடிவமைப்பு | |
லேட் | காலம் கடந்து | |
லைசென்ஸ் | உரிமம் | |
லைட் | விளக்கு | |
விசிட்டிங்கார்டு | காண்டிச்சீட்டு | |
விஞ்ஞானம் | அறிவியல் | |
வீடியோகேசட் | ஒளிப்பேழை | |
வெரிபிகே~ன் | சரிபார்த்தல் | |
வொர்க்~hப் | பணிமனை | |
வோல்டு | உலகம் | |
ஜங்ஷன் | கூடல் | |
ஜட்ஜ் | நீதிபதி | |
ஜனங்கள் | மக்கள் | |
ஜீப் | கரட்டுந்து | |
ஜெராக்ஸ் | ஒளிப்படி | |
ஸ்கூல் | பள்ளி | |
ஸ்டேசனரி சாப் | எழுது பொருள் அங்காடி | |
ஸ்டேட் கவர்ன்மென்ட் | மாநில அரசு | |
ஸ்டேடியம் | விளையாட்டரங்கம் | |
ஸ்டோர் | பண்டகம் | |
ஸ்நாக்ஸ் | சிற்றுணவு | |
ஸ்பீக்கர் | பேசுபவர் | |
ஸ்பெ~ல் | தனி | |
ஹெலிகாப்டர் | சுருள் வானூர்தி | |
ஹேர்கட்டிங் சலூன் | முடித்திருத்தகம் |