- ஜூலை 15-ல் மறைமலையடிகளின் 147வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது
- ஜீலை 15-ல் மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
- EKVI விமானப் பயிற்சி ஆர்கனைசேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது விமான பயிற்சி நிலையத்தை சேலத்தில் அமைக்க உள்ளது.இது தமிழ் நாட்டின் முதல் விமான பயிற்சி நிலையம் ஆகும்
- இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையேயான வர்த்தகம் ரூபாய் மற்றும் திராமில் நடைபெற இந்திய ரிசர்வ் வங்கி – UAE மத்திய வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையழுத்தானது.
- இந்தியா – தான்சானியா இடையே சொந்த கரன்சிகளான ரூபாய் – ஷில்லிங்-ல் வர்த்தகம் நடைபெற உள்ளது
- தெலுங்கானாவின் காசிபேட்டையில் புதிய இரயில்வே உற்பத்தி அலகு அமைய உள்ளது
- நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீ சங்கர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவ்வெற்றியினால் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்
- உயரம் தாண்டுதலில் செளரவ் குஷோரே வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்
- மகளிர் ஹெப்டதலான் பிரிவல் ஸ்வப்னா பர்மன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 2017-ல் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆடவர் 400மீ தடை தாண்டுதலில் சந்தோஷ் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். சாதனை நேரத்துடன் கடந்த இந்திய வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.
- 4/400 கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா மிஸ்ரா, அமோஜ் ஜேக்கப், சுபா வெங்கடேசன் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக். குடியரசின் மார்கெட்டா வோண்டு ரோஸோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- 60 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக தரவரிசையில் இடம் பிடிக்காமல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.07.2023
By -
July 16, 2023
0