TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.07.2023

TNPSC  Payilagam
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.07.2023

இந்திர தனுஷ் (Mission Indra Dhanush): சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆகஸ்ட் 7முதல் 3தவணைகளில் இந்திராதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் – நடத்தப்பட உள்ளது.இந்திர தனுஷ் திட்டம் 25.12.2014-ல்  இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் தொடங்கப்பட்டது.தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய கொடி நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துதலே இதன் நோக்கமாகும்.

ஜி20 எரிசக்தி அமைச்சர்கள் மாநாடு:கோவா தலைநகர் பனாஜியில் ஜி20 எரிசக்தி அமைச்சர்கள் மாநாடானது நடைபெற்றது.26.09.1999-ல் தொடங்கப்பட்ட ஜி20யில் 19 நாடுகளும், 1 யூரோப்பிய யூனியனும் உறுப்பினர்களாக உள்ளன.இதன் தலைமை பொறுப்பினை இந்தியா 01.11.22 முதல் 31.10.23 வரை வகிக்கிறது.ஜி20 மாநாட்டின் கருப்பொருள்: One Earth One Family One Future

நீண்ட கால பிரதமர் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முன்னேற்றியுள்ளார்.இவர் 2000, மார்ச் 5 முதல் 23 ஆண்டுகள் 138 நாட்கள் வரை முதல்வர் பதவி வகித்துள்ளார்.24 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக பதவி வகித்து சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் முதலிடத்தில் இருக்கிறார்.மூன்றாம் இடத்திற்கு மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் ஜோதிபாசு பின்தங்கியுள்ளார்

AI for India 2.0:செயற்கை நுண்ணறிவு குறித்த இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கும் விதமாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் AI for India 2.0 முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியானது ஐ.நா. அறிக்கைகளின் படி 7.79%மாக உயர்ந்துள்ளது

குடிநீர் பாட்டில் உற்பத்தி தடை :அசாமில் பாலி எத்திலீன் டெரெப்தாலேட் மூலம்  தயாரிக்கப்படும் ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல் :இந்தியாவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோலானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.2025-க்குள் நாடு முழுவதும் பயன்பாடுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜோபைடன் பரிந்துரை :அமெரிக்க முதல் முறையாக கடற்படை தளபதி பதவிக்கு லிசா ஃபிரான்செட்டி என்ற பெண் முதல் முறையாக ஜோபைடனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் தேசிய வாட்டர் போலோ விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் ஆர்.ஆராதனா டைவிங் பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீராங்கனையான ஆயிஷா நசீம் 18வயதில் ஓய்வு  அறிவித்துள்ளார்

Post a Comment

0Comments

Post a Comment (0)