TODAY CURRENT AFFAIRS IN TAMIL 25.07.2023
- World Drowsing Prevention Day – July 25 :கருப்பொருள்: “Do One Thing to Prevent Drownings.”
- 25.07.2023-ல் மணற்கேணி செயலியானது 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க தொடங்கப்பட உள்ளது.
- வரிமான வரி சந்தேகங்களை தீர்க்க நாட்டில் முதல் AI மூலம் இயங்கும் சாட்பாட் இணைய தள செயலியாக டி.டி.எஸ் நண்பன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் விதமாக இ சரஸ் (e SARAS) செயலியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- 06.07.2023-ல் கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த COOP BAZAAR செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- கீதா ஹிரண்யன் இலக்கிய விருது 2022: கேரள எழுத்தாளர் கே.அகில்-க்கு நீலச்சடையன் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக கேரளா சாகித்திய அகாதெமி சார்பில் 2022-ம் ஆண்டுக்கான கீதா ஹிரண்யன் இலக்கிய விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் சாகித்திய அகாதெமி சார்பில் 2023-ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருதானது ராம் தங்கம் என்பவருக்கு திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது
- 2023-ம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருதானது உதய சங்கர் என்பவருக்கு ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளதுசாகித்திய அகாதெமி தலைவராக மாதவ் கெளசிக் செயல்பட்டு வருகிறார்
- 2022-23ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி 8.15%-ற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.2021-22 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி 8.1%மாக இருந்துள்ளது.
- ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து மலேசிய நாட்டின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டிஎஸ்-சார் (DS-SAR)-யை பிஎஸ்எல்வி சி-56 (BSLV C-56) ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- லான் மஸ்க் ட்விட்டரின் பெயரை எக்ஸ்(X) எனவும் நீல நிற பறவையின் இலச்சினையினையை எக்ஸ் என்ற இலச்சினையாகம் மாற்றம் செய்துள்ளார்.டிவிட்டுகளை எக்ஸ்கள் எனவும் மாற்றி அமைத்துள்ளார்.
- மெட்டா நிறுவனத்தால் டுவிட்டருக்கு போட்டியாக Threads App என்ற மைக்ரோ பிளாக்கிங் செயலி உருவாக்கப்பட்டது
- இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமைச்சகர்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நீதிமன்றங்கள் சீராய்வு செய்வதற்கு தடை செய்யும் நீதித்துறை மசோதாதாவனது 64 பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
- ஐடிஎஃப் மகளிர் உலக டூர் டென்னிஸ் போட்டி – அமெரிக்கா : மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கர்மான்கெளர் தண்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- பின்லாந்து நடைபெற்ற டாம்பியர் ஓபன் ஏபிடி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றார்
- ஹங்கேரி கிராண்ட் ஃப்ரீ கார் பந்தயத்தில் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு சீசனில் இவரின் 9வது வெற்றி இதுவாகும்.
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தென்கொரியாவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 17 பதக்கங்களுடன் இந்தியா 2ஆம் இடத்தை (6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம்) பிடித்துள்ளது.
- ஆடவர் 50மீ பிஸ்டல் தனிநபர் பிரிவில் கமல் ஜீத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்
- ஆடவர் 50மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் கமல் ஜீத், அங்கைத் தோமர், சந்தீப் பிஷ்னோய் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
- மகளிர் 50மீ பிஸ்டல் தனிநபர் பிரிவில் தியானா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்
- மகளிர் 50மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் தியானா, யாஷிதா ஷோகீன், வீர்பால் கெளர் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.