TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.07.2023

TNPSC  Payilagam
By -
0


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.07.2023

  • கார்கில் போர் வெற்றி தினம் (Kargil Vijay Diwas) – திராஸ்: 24-வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் திராஸ் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வீரவணக்கம் செலுத்தினார்.July 26:1999-ல் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா அடைந்த வெற்றியின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
  • சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு தினம் (International Day the Conservation of Mangrove Ecosystem) – July 26:மத்திய அரசு மாங்குரோவ் காடுகளை பாதுகாக்க மிஷ்டி என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது.
  • முதலமைச்சர் கோப்பை 2023: 2023 ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டியில் சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.இரண்டாவது, மூன்றாம் இடங்கள் முறையே செங்கல்பட்டு, கோவை மாவட்டங்கள் பிடித்துள்ளன.முதலமைச்சர் கோப்பை போட்டி இலச்சினையாக நீலகிரி வரையாடு தலையுடன் மனித உடலுடன் கூடிய வீரன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • 2023 முதல்வர் கோப்பை பற்றிய நூலான களம் நமதே என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
  • ராஜ்கோட்டில் குஜராத்தின் முதல் கீரின் பில்ட் விமான நிலையம் (Greenfield Airport) தொடங்கப்பட்டுள்ளது
  • சூரிய மின்னாற்றலை இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் கொச்சி விமான நிலையம் ஆகும்
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ம.ராசேந்திரன் தொகுத்த சாகித்திய அகாடமி நூலான இந்திய இலக்கிய சிற்பிகள் – கலைஞர் மு.கருணாநிதி அண்மையில் வெளியீடப்பட்டள்ளது.
  • சென்னையில் ஜி20 கூட்டமைப்பின் 4வது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடானது நடைபெறுகிறது.முதல் மூன்று மாநாடுகளான பெங்களூரு, மும்பை, காந்தி நகர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
  • கோவை விஜயா பதிப்பகம், விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு 2023-ம் ஆண்டிற்கான கி.ரா.விருது வழங்கபட்டுள்ளது.இவர் 2023 ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ட்விட்டரின் இலச்சினையானது நீல நிறப் பறவைக்கு பதிலாக எக்ஸ் என மாற்றப்பட்டுள்ளது.
  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இலச்சினையாக பொம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா இலச்சினையாக ஆதினி (இருவாச்சி பறவை – மேற்கு தொடர்ச்சி மலை) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • பனை மரத்தின் சிறப்பைப் போற்றும் நெட்டே நெட்டே பனைமரமே என்ற நூலானது தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்
  • கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மாதந்தோறும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்ட முகாமினை தொடங்கி வைத்தார்
  • பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தேவேந்திர குமார் உபாத்யாவும் ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீரஜி சிங் தாகூரும் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.(விதி 217 – குடியரசுத்தலைவரால் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுதல்)
  • நாகலாந்து மாவட்டத்திலிருந்து மாநிலங்களவைக்கு தலைமை தாங்கும் முதல் பெண் என்ற பெருமையை ஃபாங்னான் கொன்யாக் பெற்றுள்ளார்.
  • குஜராத்தில் 60வது பிலிம்பேர் விருதுகள் நடைபெறகிறது
  • ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு (Gender Change Surgery) தடை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)