TODAY CURRENT AFFAIRS IN TAMIL 29.07.2023
- தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இது தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 3 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறுகிறது.பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியையும் அவர் விடுவித்தார். 6207 பள்ளிகளுக்கு முதல் தவணையாக ரூ.630 கோடி வழங்கப்பட்டது.12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்ட புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
- ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஜூலை 30 காலை 6:30 மணியளவில் இஸ்ரோவின் பி.ஸ்.எல்.வி சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.சிங்கப்பூரின் DS-SAR புவி கண்காணிப்பு செயற்கை கோளை ராக்கெட் சுமந்து சென்றது. இது தவிர மேலும் 7 செயற்கை கோள்களும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன.ராக்கெட்டானது பூமியிலிருந்து 535 கி.மீ., உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமியின் மேற்பரப்பினை ஆராயவும் தட்ப வெப்ப மாற்றங்களை ஆராயவும் ராக்கெட் பயன்படும்.
- சீனாவின் செங்டு பகுதியில் `பிஸு’ உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகளை இளவேனில் வாலறிவன் எடுத்து முதலிடம் பெற்றார். இதன்மூலம் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.இதேபோல் மகளிர் அணிப் பிரிவில் மனு பாகர், யஷஸ்வினி தேஸ்வால், அபிந்த்யா பாட்டீல் ஆகியோர் அடங்கிய அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது.இதே பிரிவில் சீன அணியினர் வெள்ளியையும், ஈரான் அணியினர் வெண்கலத்தையும் கைப்பற்றினர்.மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் தங்கம் வென்றார். இதே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை ஃபேபியன் சாரா வெள்ளியையும், சீன தைபே வீராங்கனை யு-ஜு ஜென் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர்.
- ஜூலை 29 – சர்வதேச புலிகள் தினம் 2023 / INTERNATIONAL TIGER DAY 2023 புலிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும் புலிகளின் இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாப்பதை மேம்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலக புலிகள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
- 1876 – இந்தியாவில் அறிவியல் சாகுபடிக்கான இந்திய சங்கம் நிறுவப்பட்டது: ஜூலை 29, 1876 இல் டாக்டர் மகேந்திர லால் சிர்காரால் நிறுவப்பட்டது, IACS என்பது அடிப்படை அறிவியலின் எல்லைப் பகுதிகளில் அடிப்படை ஆராய்ச்சியைத் தொடர அர்ப்பணித்த இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனம் ஆகும்.
- ஒலிம்பிக் தரத்தில் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய செயற்கை இழை மைதானத்தையும், கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மடத்தையும் தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்
- தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார்
- பெங்களூரு நகரமானது உலக நகரங்கள் கலாச்சார மன்றத்தில் 41வது நகரமாக இணைந்துள்ளது.இப்பட்டியிலில் இந்திய அளவில் இணைந்துள்ள முதல் நகரமாகும்.