Unuse Drinking Water-on-Report 2023

TNPSC  Payilagam
By -
0

 குடிநீர்-பற்றிய-அறிக்கை 2023

  • உலக சுகாதார அமைப்பானது, பாதுகாப்பற்றக் குடிநீர், தூய்மை முறை மற்றும் சுகாதாரம் ஆகியவற்றினால் ஏற்படும் நோய்களின் சுமை: 2019 என்று பெயரிடப்பட்ட அறிக்கையின் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தினைச் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • உலக மக்கள்தொகையில் பாதி பேருக்கு இன்னும் குடிநீர், தூய்மை நிலை மற்றும் சுகாதாரம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறவில்லை.
  • இது 2019 ஆம் ஆண்டில் குறைந்தது 1.4 மில்லியன் மக்களின் உயிரிழப்பு மற்றும் 74 மில்லியன் மிகவும் மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால (DALY) இழப்பிற்கும் காரணமாக இருந்தது.
  • உலகளவில், 771 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான தண்ணீர் வசதி இல்லை என்பதோடு 1.7 பில்லியன் மக்களுக்குக் கழிப்பறை வசதியும் இல்லை.
  • பாதுகாப்பற்றக் குடிநீர், தூய்மை நிலை மற்றும் சுகாதாரம் (WASH) ஆகியவை ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் ஏற்பட்ட 395,000 உயிரிழப்புகளுக்கு காரணம் ஆகும்.
  • வயிற்றுப்போக்கினால் ஏற்பட்ட 273,000 உயிரிழப்புகளும், கடுமையான சுவாச நோய்த் தொற்றுகளால் ஏற்பட்ட 112,000 உயிரிழப்புகளும் இதில் அடங்கும்.
  • மண் மூலம் பரவும் குடற்புழுப் பாதிப்பினால் 1.5 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • வயிற்றுப் போக்கு நோய்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் மற்றும் 55 மில்லியனுக்கும் அதிகமான மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன் கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால (DALY) இழப்புகளுடன் இதன் தொடர்புடையப் பாதிப்புகளில் பெரும்பங்கினைக் கொண்டுள்ளன.
  • கடுமையான சுவாச நோய்த் தொற்றுகள் ஆனது 356,000 உயிரிழப்புகள் மற்றும் 17 மில்லியன் மிகவும் மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால (DALY) இழப்புகளுடன், இரண்டாவது பெரியப் பங்களிப்பாளராக அடையாளம் காணப் பட்டுள்ளது.
  • ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் நோயில் 10 சதவீதம் (புரத -ஆற்றல் ஊட்டச் சத்து குறைபாடு (PEM)) ஆனது இந்த வயதினரில் ஏற்படும் மொத்தம் 8,000 உயிர் இழப்புகள் மற்றும் 825,000 மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன் கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஒரு ஆயுட்கால (DALY) இழப்பிற்குக் காரணமாக  அமைகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 384,000 வயிற்றுப் போக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் 20 மில்லியன் மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால (DALY) இழப்புகள் பதிவாகியுள்ளன.

Post a Comment

0Comments

Post a Comment (0)