கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் 2023:
மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு, இலவச எரிவாயு இணைப்பு எனப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து மகளிா் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்த அரசுதான் திமுக அரசாகும். மகளிருக்கான சிறப்பு வாய்ந்த திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அவரது அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையிலும், அவரது நூற்றாண்டு விழாவுக்கு மேலும் பெருமை சோ்க்கும் விதத்திலும், மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் சூட்டப்படுகிறது. இந்தத் திட்டமானது, ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம்’ என அழைக்கப்படும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
தகுதிகள் தொடர்பான அறிவிப்புகள்
கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக தமிழக அரசின் சார்பில் ரூ7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தில் பயனடைபவர்கள் ஆவணங்கள மற்றும் தகுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
அதேபோல் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணபிக்கும் விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும் என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா உள்ளிட்ட 10 கேள்விகள் உள்ளன. மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்கள் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன.
UPDATED:
மகளிர் உரிமைத்தொகை: 7 லட்சம் மறு விண்ணப்பங்கள்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தற்போது வரை 7 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்காக தமிழ்நாடு முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விடுபட்டவர்களுக்கு செப்டம்பர் 18 முதல் அவகாசம் வழங்கபட்டது. மறுவிண்ணப்பம் செய்ய 30 நாட்கள் அவகாசம் தரப்பட்ட நிலையில் தற்போது வரை 7 லட்சம் பேர் விண்ணபித்துள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்:
தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அக். 25 ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 10.11.23 (நவ.10) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். வெள்ளிக்கிழமை (நவ.10) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.