CINEMATOGRAPH AMENDMENT BILL 2023 / திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023

TNPSC  Payilagam
By -
0



திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023

CINEMATOGRAPH AMENDMENT BILL 2023: திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 மக்களவையில்  ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் ஜூலை 31, 2023 நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா  27  ஜூலை 2023 அன்று மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது . 1952-ம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் கடைசியாக 1984-ம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டதால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சில மதிப்பீடுகளின் அடிப்படையில் திரைத்துறைக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டு அச்சுறுத்தலை முற்றிலுமாகத் தடுப்பதை இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

CINEMATOGRAPH AMENDMENT BILL 2023: சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பைரஸியில் ஈடுபடுவோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது திரைப்படத் தயாரிப்பில் 5 சதவீதம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் 7 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கக் கூடிய படங்களுக்கு UA 7+, 13 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கக் கூடிய படங்களுக்கு UA 13+, 16 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கக் கூடிய படங்களுக்கு UA 16 +, என புதிய ரேட்டிங் முறையைக் கொண்டுவர வகை செய்யும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)