LIST OF MILITARY EXERCISES OF INDIA 2023-2024 / இந்திய இராணுவப் பயிற்சிகளின் பட்டியல் 2023-2024

TNPSC PAYILAGAM
By -
0

 

LIST OF MILITARY EXERCISES OF INDIA


1.AUSTRAHIND-23 : ராஜஸ்தானில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து முதல் கூட்டு இராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ள நிலையில் 2வது கூட்டு இராணுவப் பயிற்சியானது AUSTRAHIND-23 என்னும் பெயரில் நடத்தப்பட்டுள்ளது.

2.மித்ர சக்தி (Mitra Shakti) : இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியான மித்ரா சக்தியின் 9 வது பதிப்பு சமீபத்தில் புனேயில் தொடங்கியது.

3.கூட்டு கடற்படை பயிற்சி :போங்கோசாகார் கூட்டு கடற்படை பயிற்சியானது இந்தியா, பங்களாதேஷ் இடையே நடைபெற்றுள்ளது.

4.இந்தியா-இலங்கை இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது மித்ரா 2023 என்ற பெயரில் நடைபெற உள்ளது.

5.காஜிண்ட் (Kazint) என்னும் கூட்டு இராணுவப் பயிற்சியானது இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்றது.காஜிண்ட்-2023′ கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 120 பேர் கொண்ட இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக் குழு கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றது. கஜகஸ்தானின் ஓட்டார் நகரில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.இந்தியா- கஜகஸ்தான் இடையேயான கூட்டுப் பயிற்சி 2016-ஆம் ஆண்டு ‘பிரபால் டோஸ்டைக்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பிறகு இது நிறுவன அளவிலாக மேம்படுத்தப்பட்டு ,’காஜிண்ட் பயிற்சி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

6.ஹரிமெள சக்தி பயிற்சி 2023 (Harimau Shakti) :இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையே ஹரிமெள சக்தி பயிற்சி 2023 (Harimau Shakti) என்னும் கூட்டு ராணுவப்பயிற்சியானது நடைபெற்றுள்ளது.

7.சம்ப்ரிதி 2023:மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா- வங்கதேசம்  இடையே 11-ம் ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியான சம்ப்ரிதி 2023 அக்டோபர் 03-ம் தேதி தொடங்கியது. சுழற்சி அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஏற்பாடு செய்யும் இந்தப் பயிற்சி அடிப்படையில் வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை குறிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் அசாமின் ஜோர்ஹாட்டில் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி 2022 –ம் ஆண்டு வரை பத்து வெற்றிகரமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

8.இந்தியா-இந்தோனிசியா இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி கருட சக்தி என்ற பெயரில் நடைபெற்றது

9.அலாஸ்காவில் யூத் அபியாஸ் (YUDH ABHYAS) எனும் இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான கூட்டு 19வது இராணுவப் பயிற்சியானது தொடங்கியுள்ளது. 18வது இராணுவப் பயிற்சியானது உத்திரகாண்டின் அவுலி என்னுமிடத்தில் நடைபெற்றிருந்தது.

10.மேகாலயாவின் உம்ரோய்யில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 11வது சம்ப்ரிதி கூட்டு இராணுவப் போர் பயிற்சியானது நடைபெற்றது.

11.21வது வருணா கூட்டு பயிற்சியை இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் அரபிக்கடலில் நடத்தியுள்ளது. 1993-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இப்பயிற்சிக்கு 2001-ல் வருணா என பெயர் இடப்பட்டது

12.பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ‘பிரைட் ஸ்டாா்’ போா்ப் பயிற்சி எகிப்தில் உள்ள கெய்ரோ (மேற்கு) விமானப் படை தளத்தில் 27.08.2023 தொடங்கியது. இந்தப் போா்ப் பயிற்சியில் இந்திய விமானப் படையின் மிக்-29 போா் விமானங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் இந்திய விமானப் படை பங்கேற்பது இதுவே முதல் முறை. இந்திய ராணுவத்தின் 150 வீரா்கள் அடங்கிய குழுவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது

13.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கியுள்ள க்வாட் நாடுகள் பங்கேற்கும் கடற்படை பயிற்சியானது மலபார் என்னும் பெயரில்  ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்றது இப்பயிற்சியல் இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சஹ்யாத்திரி, ஐஎன்எஸ் கொல்கத்தா போர்கப்பல்கள் இடம் பெற்றன

14.உத்திரகாண்ட்டில் இந்தியா மற்றும் மாலத்தீவு ராணுவத்திற்கு இடையேயான 12வது எகுவெரின் ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

15.இந்தியா உட்பட 20 நாடுகளின் இராணுவ வீரர்கள்பங்கேற்ற  சர்வதேச அமைதிப்படை பயிற்சியானது மங்கோலியாவில்  எக்ஸ் கான் க்வெஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்டது.

16.இந்தியா-சவுதி அரேபியா இடையிலான கூட்டு இராணுவப் போர் பயிற்சி அல்-மொஹத்-அல் ஹிந்தி என்ற பெயரில் சவுதி அரேபியாவின், ஜூபைலில் நடைபெற்றுள்ளது.

17.இந்தியா-பிரிட்டன் இடையிலான கூட்டுப்பயிற்சியானது இந்திய அரபிக்கடல் பகுதியில் கொங்கன் 2023 எனும் பெயரில் நடத்தப்பட்டுள்ளது.

18.ஹரிமாவ் சக்தி: இந்தியாவும் மலேசியாவும் இணைந்து நடத்தும் கூட்டுப் பயிற்சி.

ஹரிமாவ் சக்தி 2024 : HARIMAU SHAKTI 2024

  • இந்தியா-மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சியான ஹரிமாவ் சக்தியின் 4-வது பதிப்பு மலேசியாவின் பகாங் மாவட்டத்தில் உள்ள பென்டாங் முகாமில் 02.12.2024 தொடங்கியது. இந்த பயிற்சி 2024 டிசம்பர் 2முதல்15 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • 78 வீரர்களைக் கொண்ட இந்தியப் படைப்பிரிவில் மஹர் படைப்பிரிவின் ஒரு பிரிவு பங்கேற்கிறது. மலேசிய அரச படைப்பிரிவைச் சேர்ந்த 123 வீரர்கள் மலேசியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கூட்டுப் பயிற்சி ஹரிமாவ் சக்தி என்பது இந்தியாவிலும் மலேசியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும்  ராணுவப்பயிற்சி நிகழ்வாகும். இதற்கு முந்தைய பயிற்சி நவம்பர் 2023-ல் இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உம்ரோய் கன்டோன்மென்ட்டில் நடத்தப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது பதிப்பின் கீழ் காட்டுப் பகுதிகளில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தரப்பினரின் கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். இந்தப் பயிற்சி வனச் சூழலில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்.

19.யுத் அபியாஸ்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு பயிற்சி.

20.பிட்ச் பிளாக் பயிற்சி: ஆஸ்திரேலியா நடத்திய பலதரப்பு வான் போர் பயிற்சி.

21.கான்ஜார்: இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையேயான கூட்டுப் பயிற்சி.

22.டாலிஸ்மேன் சேபர்: ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, இந்தியாவை ஒரு பார்வையாளராகக் கொண்ட ஒரு வருடாந்திர பயிற்சி.

23.வாயு பிரஹார் பயிற்சி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஏ.சி) ஒரு பன்முக பயிற்சி.

24.உடற்பயிற்சி தைரியமான குருக்ஷேத்ரா: இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சி.

25.பாலைவனக் கொடி: ஐக்கிய அரபு அமீரகத்தால் நடத்தப்படும் பலதரப்பு வான் பயிற்சி.

26.முப்படைகளின் நீர்மூழ்கிப் பயிற்சி, ஆம்பெக்ஸ்: இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி.

27.அழியாத சகோதரத்துவம்: இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து நடத்தும் கூட்டுப் பயிற்சி.

28.இந்தியா & யுஏஇ கடற்படை இடையேயான கூட்டு இராணுவ போர் பயிற்சியானது சயீத் தல்வார் என்னும் பெயரில் யுஏஇ-ல் நடைபெற்றுள்ளது

29.க்வாட் அமைப்புகள் பங்குபெறும் மலபார் கூட்டு கடற்படை பயிற்சியானது  ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்றது

30.VINBAX-2023 நான்காவது கூட்டு ராணுவப் பயிற்சியின் இந்தியாவும் வியட்நாமும் பங்கேற்கின்றன. வியட்நாமின் ஹனோய் நகரில் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. ராணுவ பயிற்சி VINBAX-2023 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் முதல் ராணுவ பயிற்சி  மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடத்தப்பட்டது. இது இந்தியா மற்றும் வியட்நாமில் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். கடைசியாக 2022 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சந்திமந்திர் ராணுவ நிலையத்தில் நடத்தப்பட்டது. இந்த கூட்டுப் பயிற்சி இரு படைப்பிரிவுகளுக்கும் இடையிலான புரிதல் மற்றும் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்தவும், நட்பு இராணுவங்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் உதவும்.

31.தோஸ்தி-16 : இந்தியா, மாலத்தீவு, இலங்கை இணைந்து தோஸ்தி-16 என்னும் முத்தரப்பு பயிற்சியை மாலத்தீவில் நடத்தியுள்ளது.இப்பயிற்சியானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டுள்ளது.

32.   5வது 'தர்மா கார்டியன்' கூட்டு ராணுவப் பயிற்சி  : இந்திய ராணுவம் மற்றும் ஜப்பானின்  தரைப்படை இடையேயான 5வது 'தர்மா கார்டியன்' கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் 25.02.2024 தொடங்கியது. இந்தப்  பயிற்சியை 2024 மார்ச் 9வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 'தர்மா கார்டியன்' பயிற்சி ஆண்டுதோறும் இந்தியா மற்றும் ஜப்பானில் மாறி மாறி நடத்தப்படுகிறது. இரு தரப்பிலும் தலா 40 வீரர்கள் உள்ளனர். ஜப்பானிய படைப்பிரிவை 34வது காலாட்படைப்பிரிவின் துருப்புகளும், இந்திய ராணுவ படைப்பிரிவை ராஜபுதன ரைபில்ஸைச் சேர்ந்த ஒரு பட்டாலியனும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.தர்மா கார்டியன் பயிற்சி" நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜப்பான்  தரைப்படையின் கிழக்கு கமாண்டிங் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் டோகாஷி யுய்ச்சி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இவர்  மார்ச் 3  அன்று பயிற்சிகளைக் காண்பார்.
 
33.கடல்சார் பயிற்சி (நசீம் அல் பஹ்ர்): இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் திரிகண்ட் மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானங்கள், ஓமன் ராயல் கடற்படையின் அல் சீப் கப்பலுடன் அக்டோபர் 13 முதல் 18 வரை கோவா கடற்கரைக்கு அப்பால்   இந்தோ-ஓமன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான நசீம்-அல்-பஹ்ரில் பங்கேற்றன.

சிங்கப்பூர் இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி 2024 :
  • 31-வது சிங்கப்பூர் இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி 2024 அக்டோபர் 23 முதல் 29 வரை விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் நடத்தப்படுகிறது. 
  • சிங்கப்பூர் குடியரசின் கடற்படைக் கப்பல் ஆர்.எஸ்.எஸ் டெனாசியஸ் ஹெலிகாப்டருடன் பங்கேற்பதற்காக அக்டோபர் 2024 23 அன்று விசாகப்பட்டினம் வந்தடைந்தது. 1994-ம் ஆண்டில் 'எக்சர்சைஸ் லயன் கிங்' என்று தொடங்கப்பட்ட கூட்டுப்பயிற்சியானது இந்திய கடற்படைக்கும் சிங்கப்பூர் குடியரசு கடற்படைக்கும் இடையிலான மிக முக்கியமான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 
  • இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - அக்டோபர் 23 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் துறைமுக பகுதியிலும், வங்காள விரிகுடாவில் அக்டோபர் 28 முதல் 29 வரை கடல் பகுதியிலும் நடைபெற உள்ளது. 

ஜெர்மன் கடற்படையுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சி 2024 :
  • இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தில்லி, ஜெர்மன் கடற்படையின் போர்க்கப்பல் பாடன்-வூர்ட்டம்பெர்க் மற்றும் டேங்கர் பிராங்க்பர்ட் ஆம் மெய்ன் ஆகியவை இந்தியப் பெருங்கடலில் கடல்சார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டன. 
  • வங்காள விரிகுடாவில் முதல் இந்திய-ஜெர்மன் கடல்சார் கூட்டுப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதையும், கடற்படைகளுக்கு இடையிலான இயங்குதன்மையையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐ.என்.எஸ் தில்லி கப்பல் ஏவுகணை அழிப்பு முன்னணி கப்பலாக விளங்குகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)