முஸ்லிம் பெண்கள் உரிமைகள் தினம் 2023:
முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நாடு முழுவதும் முஸ்லிம் பெண்கள் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக மத்திய அரசு அறிவித்தது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019, இந்தியாவில் முத்தலாக் நடைமுறையை தடை செய்கிறது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை நினைவுகூரும் வகையில், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முஸ்லிம் பெண்கள் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவதாக மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவித்தது.