National Nursing and Midwifery Commission (NNMC) Bill, 2023 / National Dental Commission Bill, 2023

TNPSC  Payilagam
By -
0



National Nursing and Midwifery Commission (NNMC) Bill, 2023 / National Dental Commission Bill, 2023

நாட்டில் தரமான பல் மருத்துவம் மற்றும் செவிலியா் படிப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட ‘தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா 2023’ மற்றும் ‘தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதா 2023’ ஆகியவற்றுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த இரு மசோதாக்களையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அறிமுகம் செய்தாா். அப்போது, ‘நாட்டில் பல் மருத்துவம் மற்றும் செவிலியா் படிப்புகளை தரமானதாக மேம்படுத்தவும், அவற்றுக்கான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை வலுப்படுத்தவும் இந்த மசோதாக்கள் உதவும். தரமான பல் மருத்துவா்கள், செவிலியா்களை உருவாக்கி இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதே இந்த மசோதாக்களின் நோக்கம்’ என்று மன்சுக் மாண்டவியா கூறினாா். அதனைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக இரண்டு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, 2023:

 National Dental Commission Bill, 2023:தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதாவைப் பொருத்தவரை, நடைமுறையில் உள்ள பல் மருத்துவா்கள் சட்டம் 1948-ஐ ரத்து செய்துவிட்டு, பல் மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவச் சேவையை ஒழுங்குபடுத்தும் வகையில் தேசிய பல் மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) அமைக்க வழி செய்கிறது. நியாயமான கட்டணத்தில் தரமான பல் மருத்துவக் கல்வி கிடைப்பதையும் இந்த ஆணையம் உறுதி செய்யும். 

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 50% இடங்களுக்குக் கட்டண நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கவும் இந்த மசோதா ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கும். கூடுதலாக, சட்டம் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், அனைத்து மாநில அரசுகளும் பல் மருத்துவ கவுன்சில்கள் அல்லது கூட்டு பல் கவுன்சில்களை நிறுவுமாறு அறிவுறுத்தப்படும்.

தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு ஆணைய மசோதா, 2023:

National Nursing and Midwifery Commission (NNMC) Bill, 2023 :தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதாவைப் பொருத்தவரை, இந்திய செவிலியா் கவுன்சில் சட்டம் 1947-ஐ ரத்து செய்துவிட்டு, தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணையத்தை அமைக்க வழி செய்கிறது. தரமான செவிலியா் கல்வி மற்றும் செவிலியா், பேறுகால மருத்துவ உதவியாளா் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும்.

தேசிய செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆணையம் மற்றும் தேசிய அளவில் தன்னாட்சி வாரியங்கள் நிறுவப்படும், மேலும் கல்வி மற்றும் சேவைத் தரங்களை ஒழுங்குபடுத்தவும் பராமரிக்கவும், தொழில்முறை நடத்தையை மேற்பார்வையிடவும், நிர்வகிக்கவும் அதற்கேற்ப மாநில நர்சிங் மற்றும் மருத்துவச்சி ஆணையங்களும் அமைக்கப்படும். ஆன்லைன் மற்றும் நேரடி பதிவுகள்" என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிடுகிறது. செவிலியர் கல்வி முழுவதும் நிலைத்தன்மையை உறுதிசெய்ய தரப்படுத்தப்பட்ட சேர்க்கை செயல்முறையை ஆணையம் செயல்படுத்தும் என்றும், நர்சிங் கல்வியில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்றும் அது கூறியது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)