PIONEERS OF INDIAN SPACE PROGRAMME / இந்திய விண்வெளி திட்டங்களின் முன்னோடிகள்

TNPSC PAYILAGAM
By -
0


இந்திய விண்வெளி திட்டங்களின் முன்னோடிகள்



விக்ரம் சாராபாய் (1963 முதல் 1972 வரை)

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படுபவர். அகமதாபாத், ஐஐஎம்-அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் பாஸ்டர் பிரீடர் டெஸ்ட் ரியாக்டர், கல்பாக்கம் போன்ற இயற்பியல் ஆய்வுக்கூடங்களை நிறுவியவர். 

எம்ஜிகே மேனன் (ஜன-செப். 1972)

அவர் காஸ்மிக் கதிர்கள் மற்றும் துகள் இயற்பியல், குறிப்பாக அடிப்படைத் துகள்களின் உயர் ஆற்றல் இடைவினைகள் பற்றிய அவரது பணிக்காக அறியப்பட்டார்.

சதீஷ் தவான் (1972-1984)

இவரது முயற்சிகள் இந்தியாவில் இன்சாட் மற்றும் பிஎஸ்எல்வி போன்ற செயல்பாட்டு அமைப்புகளுக்கு நிறுவ வழிவகுத்தது

சோம்நாத் (இஸ்ரோ தலைவர் ஜனவரி 2022 முதல் பதவியில் இருப்பவர்)

எஸ். சோம்நாத் இந்தியாவின் திட்டமிடப்பட்ட நிலவு பயணத்திற்குப் பின்னால் உள்ள முதன்மையானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஜனவரி 12, 2022 அன்று இஸ்ரோவின் 10வது தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) மற்றும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். 

இவர் சந்திரயான்-3, மேலும் ஆதித்யா-எல்1 முதல் சூரியன் ஆய்வு மற்றும் ககன்யான் (இந்தியாவின் முதல் ஆளில்லாப் பயணம்) போன்ற பிற குறிப்பிடத்தக்க பயணங்களுக்கும் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர் டாக்டர் எஸ்.சோம்நாத். சோமநாத்தின் தந்தை இந்தி கற்பித்தாலும், சோம்நாத்தின் அறிவியல் ஆர்வத்தையும், திறமையையும் ஊக்குவித்து, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அறிவியல் இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்தார்.

அரூரில் உள்ள செயின்ட் அகஸ்டின் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற சோமநாத், எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய பட்டப்படிப்பை முடித்தார். கேரளாவின் கொல்லத்தில் உள்ள தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த சோம்நாத், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில், இயக்கவியல் மற்றும் கட்டுப்பாட்டில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார்.இந்தியாவின் செயற்கைக்கோள் திட்டத்திற்காக ராக்கெட் மற்றும் விண்வெளி வாகனங்களில் கவனம் செலுத்தும், திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 1985 ஆம் ஆண்டில் சோம்நாத் பணியாற்றத் தொடங்கினார். 

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் ஆரம்ப ஒருங்கிணைப்பு பணிகளை மேற்பார்வையிட்ட அவர், 2003 ஆம் ஆண்டில் ஜிஎஸ்எல்வி எம்.கே-III திட்டத்தில் இணைந்தார். 2010ஆம் ஆண்டில் ஜிஎஸ்எல்வி எம்.கே-III ஏவுகணை வாகனத்திற்கான திட்ட இயக்குநராகவும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இணை இயக்குநராகவும் (திட்டங்கள்) நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு நவம்பர் வரை உந்துவிசை மற்றும் விண்வெளி ஆணையத்தின் துணை இயக்குநராகவும் இருந்தார். 

திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் தலைமைப் பொறுப்பை 2015ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்ட அவர், 2018ஆம் ஆண்டு ஜனவரி வரை அப்பெறுப்பில் இருந்தார்.ஏவுகணை வாகனங்களின் வடிவமைப்பில், குறிப்பாக கட்டமைப்பு இயக்கவியல், கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் பைரோடெக்னிக்ஸ் ஆகிய துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக சோம்நாத் புகழ்பெற்றவர். அதுதவிர, அதிக உந்துதல் கொண்ட செமி கிரையோஜெனிக் எஞ்சின், சந்திரயான்-2 நிலவு ஆராய்ச்சி லேண்டருக்கான த்ரோட்டில் எஞ்சின்கள் மற்றும் ஜிசாட்-9 எலக்ட்ரிக் ப்ரொபல்ஷன் சிஸ்டத்தை வெற்றிகரமாக ஏவுவதற்கும் அவர் தலைமை தாங்கினார்.

இஸ்ரோவின் தலைவரான சிவன் பொறுப்பேற்றபிறகு, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்ற சோம்நாத், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி, சிவன் ஒய்வுபெற்ற பிறகு, இஸ்ரோவின் 10ஆவது தலைவராக பொறுப்பேற்றார். கடந்த ஒரு வருடமாக இஸ்ரோ தலைவராக பணியாற்றி வரும் சோம்நாத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதேபோன்று, சந்திரயான்-3 லேண்டர், ரோவர் ஆகியவை வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு இந்தியா புதிய மைல்கல்லை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி. வீரமுத்துவேல் (சந்திராயன் 3 திட்ட இயக்குனர்)

2019 ஆம் ஆண்டு சந்திரயான்-3 திட்டத்தின் தலைமையை எடுப்பதற்கு முன்பு, பி. வீரமுத்துவேல் இஸ்ரோவின் விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தின் துணை இயக்குநராக பணியாற்றினார். இந்தியாவின் லட்சிய நிலவு-பயணத் தொடரில் இரண்டாவது திட்டமான சந்திரயான்-2 திட்டத்தில் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸில் (ஐஐடி-எம்) பட்டதாரியான இவர், தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் இருந்து வந்தவர் ஆவார்.

மயில்சாமி அண்ணாதுரை(சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர்) 

(பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார்.இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார். 

இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர் (விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர்)

கேரளாவின் திருவனந்தபுரத்தில் தும்பாவிற்கு அருகில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனம் (GSLV) மார்க்-III ஐ உருவாக்கியது. பின்னர் ஏவு வாகனம் மார்க்-III என மறுபெயரிடப்பட்டது. வி.எஸ்.எஸ்.சி.க்கு பொறுப்பான எஸ்.உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் அவரது ஊழியர்கள் முக்கியமான பணிக்கான பல முக்கிய பணிகளுக்கு பொறுப்பாக உள்ளனர்.

எம். சங்கரன் (யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர்)

எம் சங்கரன் ஜூன் 2021இல் யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் (URSC) இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களும் இஸ்ரோவுக்காக இந்த வசதியால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. அவர் தற்போது தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், தொலைநிலை உணர்தல், வானிலை முன்னறிவிப்பு மற்றும் கிரக ஆய்வு ஆகியவற்றில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய செயற்கைக்கோள்களை உருவாக்கும் குழுவின் தலைவராக உள்ளார்.

ஏ. ராஜராஜன் (வெளியீட்டு அங்கீகார வாரிய தலைவர்) 

ஏ ராஜராஜன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். அவர் ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கிய விண்வெளி மையமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார் (SDSC SHAR). அவர் எல்ஏபி இன் தலைவராகவும் உள்ளார். ககன்யான் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி உள்ளிட்ட இஸ்ரோவின் விரிவடையும் ஏவுகணை தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பு தயாராக இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர, சந்திரயான்-3 குழுவில் இயக்குநர் மோகன் குமார் மற்றும் வாகன இயக்குநர் பிஜு சி தாமஸ் ஆகியோர் அடங்குவர். சுமார் 54 பெண் பொறியாளர்கள்/விஞ்ஞானிகள் நேரடியாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனிதா முத்தையா (சந்திரயான்-2 திட்டத்தின் திட்ட இயக்குனர்) 

தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா ராக்கெட் பெண்மணி என்று ஊடகங்களால் புகழப்படுகிறார்.

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலம் – 2, 3,290 கிலோ எடை கொண்டது. இந்த சந்திராயன் – 2 விண்கலத்தை செலுதியதில் வனிதா முத்தையாவும் ரிது கரிதாலும் முக்கிய பொறுப்பு வகித்துள்ளனர்.இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பொறியாளர்.

இஸ்ரோ விஞ்ஞானி வனிதா முத்தையா சந்திராயன் – 2 திட்டத்தின் இயக்குனராக உள்ளார். திட்ட இயக்குனர் என்பது மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளை தயாரித்தல் உள்ளிட்டவற்றை சரிபார்ப்பது, விண்கலத்தை இறுதி வடிவத்துக்கு கொண்டுவந்து விண்கலத்தை அனுப்பும் வரை பொறுப்பு ஏற்று செயல்படுத்துவதாகும். இந்த முக்கிய பொறுப்பை வகிக்கும் வனிதா முத்தையா இஸ்ரோவின் பல முக்கிய விண்கலங்களில் செயல்பட்டுள்ளார். இவர் இஸ்ரோவில் கடந்த 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

விஞ்ஞானி வனிதா முத்தையா இதற்கு முன்பு கார்டோசாட் -1, ஓசன்சாட் – 2 உள்ளிட்ட விண்கலங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு அஸ்ட்ரானாட்டிகள் சொசைட்டி ஆஃப் இந்தியா 2006 ஆம் ஆண்டு சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு நேச்சர் என்ற சர்வதேச ஆய்விதழ் இவரை கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது

சிவன் (2018 முதல் 2022 வரை) 

சந்திராயன் வடிவமைப்பில் இவர் பங்களிப்பு கணிசமானது. ஒருங்கிணைப்பு முதல் இறுதி வரை/பணி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு. சந்திரயான்-2 மற்றும், மனிதர்களை அனுப்பும் விண்வெளி திட்டம்

ஜி மாதவன் நாயர் (2003-2009) 

இஸ்ரோ தலைவர், இஸ்ரோ/செயலாளராக பணியாற்றினார். இந்தியாவின் சந்திரயான்-1 இவரது தலைமையில் அனுப்பப்பட்டது.

SOURCE : DINATHANTHI 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)