TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF- கவிமணி தேசிகவிநாயகம்

TNPSC  Payilagam
By -
0



தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-கவிமணி தேசிகவிநாயகம்

கவிமணியின் பிறப்பும் வாழ்க்கையும்

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF :கவிமணி 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் தேரூர் சிவதாணு; தாய் ஆதிலெட்சுமி. முதலில் படித்தது மலையாளம். தேரூர் வாணந்திட்டு திருவாவடுதுறை ஆதீனம் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். திருவனந்தபுரம் மகளிர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவனந்தபுரம் மகாராசா பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், திருவனந்தபுரம் மகாராசா பெண்கள் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

கவிமணியின் படைப்புகள்

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF: இளமையிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். 1885இல் முதல் கவிதை நூல் அழகம்மை ஆசிரிய விருத்தம் எழுதப் பட்டது. மற்றைய நூல்கள்

1) மருமக்கள்வழி மான்மியம்

2) மலரும் மாலையும்

3) ஆசிய ஜோதி

4) உமர்கயாம் பாடல்கள்

5) தேவியின் கீர்த்தனைகள்

6) குழந்தைச் செல்வம்

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF: ஆசிய ஜோதி:   சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது. சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கனவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF :மலரும் மாலையும்: பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவற்றை அறியலாம்.

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF :மருமக்கள்வழி மான்மியம்: கவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. இது சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற ஒரு புரட்சிக்காவியம். மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஒரு ஏற்பாடு. சட்டம்போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன்(சகோதரியின் மகன்)களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான். இவ்வாறுதான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள்.இத்தகு புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார். அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'!

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF :ஆராய்ச்சிகள்: கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

வையாபுரிப்பிள்ளை, இராஜாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. சண்முகம் போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF :திரைத்துறையில் கவிமணி: முதன்முதலில் என்.எஸ்.கே பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான 'மணமகள்' படத்தில் ஒரு பாடல், பின்பு 'தாயுள்ளம்' என்கிற படத்தில்

கோயில் முழுதும் கண்டேன் - உயர்   கோபுரம் ஏரி கண்டேன்

தேவாதி தேவனை நான்

எங்கெங்கும் தேடினும் கண்டிலனே

என்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல் வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைதவிர 1952ல் வேலைக்காரன், 1955ல் கள்வனின் காதலி, 1956ல் கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF :பாராட்டுகளும் விருதுகளும்: 

"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் எனப் புகழ்வார் இரசிகமணி டி.கே.சி. “தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை” என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்டவர்.

"இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துகளைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. 25 டிசம்பர் 1940 இல் தமிழ்ச்சங்கம் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவர்தம் கவிபாடும் புலமையைப் பாராட்டி, தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தனர்.

1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது. 

TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF :மறைவு: 78 ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த கவிமணி மனைவியின் ஊராகிய புத்தேரி' என்கிற ஊரில் 26.09.1954 இல் வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.

பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

தொடர்பான செய்திகள் , சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்

  1. பாரதியார்- TNPSC NOTES BHARATHIYAR TAMIL PDF
  2. பாரதிதாசன் - TNPSC NOTES BHARATHIDASAN TAMIL PDF 
  3. நாமக்கல் கவிஞர்-TNPSC NOTES NAMAKKAL V. RAMALINGAM PILLAI TAMIL PDF
  4. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை -TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF

Post a Comment

0Comments

Post a Comment (0)