TNPSC TAMIL NOTES KANNADASAN-மரபுக்கவிதை-கண்ணதாசன்

TNPSC  Payilagam
By -
0



TNPSC TAMIL NOTES KANNADASAN-மரபுக்கவிதை-கண்ணதாசன் 

வாழ்க்கைக் குறிப்பு:

TNPSC TAMIL NOTES KANNADASAN: கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்

சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்

அரசியல் ஈடுபாடு

TNPSC TAMIL NOTES KANNADASAN: அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி .

மறைவு

TNPSC TAMIL NOTES KANNADASAN:உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

TNPSC TAMIL NOTES KANNADASAN: தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[12] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

TNPSC EXAM POINTS KANNADASAN:

  1. பெயர் : கண்ணதாசன் 
  2. இயர்பெயர் : முத்தையா 
  3. பிறந்ததேதி : 24-ஜூன்-1927 
  4. பெற்றோர்கள் : சாத்தப்பன் - விசாலாட்சி 
  5. படிப்பு : 8ம் வகுப்பு 
  6. முதல் வேலை : அஜக்ஸ் கம்பெனி, திருவற்றியூர் எழுத்தாளர் : 1944ல் திருமகள் பத்திரிக்கை மற்றும் 1949ல் சண்டமாருதம் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். 
  7. முதல் பாடல் : கலங்காதிரு மனமே... (படம் : கன்னியின் காதலி) 
  8. முதல் பட வசனம் : இல்லற ஜோதி முதல் 
  9. தேர்தல் அனுபவம் : 1957ல் திருக்கோஷ்டியூர் சட்டசபை தொகுதியில் தமிழ் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி 
  10. முதல் தயாரிப்பு : மாலையிட்ட மங்கை 1957ம் ஆண்டு. கண்ணதாசன் புரொடக்சன்ஸ் 
  11. விருதுகள் : சாகித்ய விருது, தேசிய விருது என பல பெருமைக்குரிய விருதுகள் பெற்றுள்ளார். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.


பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

மரபுக்கவிதை: தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)