TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.08.2023

TNPSC  Payilagam
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.08.2023

  1. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சென்னை) சிறுதானியங்களின் சங்கமம் – 2023 நடைபெற்றது.இந்நிகழ்வில் 11 சிறுதானிங்களை கொண்டு 520 வகையான சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
  2. நிர்மலா சீதாரமன் தலைமையில் நடைபெற்ற 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  இணையவழி விளையாட்டுகளுக்கும் மற்றும் சூதாட்ட விடுதிகளில் கட்டப்படும் முழு பந்தய தொகைக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
  3. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு 15 அடி ஆழத்தில் 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தற்போது 15வது குழியில் அகழாய்வு நடந்து வருகிறது.இதுவரை நடந்த அகழாய்வில் தங்க அணிகலன்கள், பகடைக்காய், தோசைக் கல், சுடுமண் பொம்மை, புகை பிடிப்பான் கருவி, காதணி உள்ளிட்ட 3,150க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், 15வது குழியில் நடந்த அகழாய்வில் சுடுமண்ணாலான வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  4. வெளிநாட்டில் இறந்த இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டு வர பதிவு செய்யவதற்காக e-CARe portal தொடங்கப்பட்டுள்ளது.e-CARe portal e – Clear for After life Remains portal.
  5. ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ள ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் உலகின் மிகப்பெரிய தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜூபிட்டர் 3 (Jupiter 3) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.கலிபோர்னியாவின் மேக்சார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் ஜூபிட்டர் 3 செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது.
  6. உலகின் முதல் திரவ மீதேன்- திரவ ஆக்ஸிஜன் எரிபொருள் ராக்கெட்டானது சீனாவால்  தயாரிக்கப்பட்டுள்ளது.
  7. சிங்கப்பூரின் டிஎஸ்-சார் (DS-SAR) எனும் புவி கண்காணிப்பு செயற்கைகோளை பிஎஸ்எல்வி சி-56 (BSLV C-56) ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
  8. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை – சென்னை:சென்னை, போரூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடங்கியுள்ளது.இதற்காக உலகில் முதல் முறையாக ஜீரோ கார்பன் முறையில் பசுமையான ஆற்றல் கொண்டு சர்வதேச தரத்திலான செயற்கையிழை ஆடுகளமானது உருவாக்கப்பட்டள்ளது.7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையின் இலச்சினையாக பொம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  9. ஆயுஷ் மருத்துவ முறைகள் / இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஆயுஷ் முறைகள், சிகிச்சை பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஒரு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11-வது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது, அதன்படி தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


Post a Comment

0Comments

Post a Comment (0)