TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.08.2023

TNPSC  Payilagam
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.08.2023

  1. இந்திய அரசாங்கம் Study In India (SII) போர்ட்டலை அறிமுகப்படுத்தியது, இது இந்தியாவை உலகளாவிய கல்வியின் மையமாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. இந்த தளம் இந்தியாவில் சர்வதேச மாணவர்களின் பயணத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்களுக்கு மதிப்புமிக்க கல்வி வாய்ப்புகளுக்கான தடையற்ற அணுகலை வழங்குகிறது.
  2. தமிழகம் உறுப்பு மாற்று சிகிச்சையில் முதலிடம் பிடித்துள்ளது.தில்லியில் மத்திய சுகாதாரத்துறையின் தேசிய உறுப்ப மற்றும் மாற்று அமைப்பு சார்பில் நடைபெற்ற 13வது உறுப்பு தான விழாவில் விருது வழங்கப்பட்டள்ளது.இவ்விருதினை தமிழகம் தொடந்து 6வது முறையாக பெறுகிறது.
  3. கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா இந்திய இராணுவ செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனராலக பதவி உயர்வு பெற்றுள்ளார்.தமிழகத்திலிருந்து இராணுவத்தில் மேஜர் ஜெனராலக பதவி வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  4. 1987 முதல் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக டி.குகேஷ் உருவெடுத்துள்ளார்.சர்வதேச அளவில் 9வது இடத்தினை பிடித்துள்ளார்.
  5. இந்தியாவில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் சாம்பியன் ஷிப்பில் 102 கிலோ பிரிவில் கபில் சோனவால் வெண்கலமும், 81 கிலோ பிரிவில் அஞ்சனா ஸ்ரீஜித் வெண்கலமும், 76 கிலோ பிரிவில் சஞ்சனா வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
  6. வீடுதேடி வந்து டீசல் வழங்கும் வகையில் மத்திய தொழிலாளர்நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் ஹம்ஸஃபர்(Humsafar) என்ற மொபைல் அப்ளிகேஷனை சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளார்

Post a Comment

0Comments

Post a Comment (0)