TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.08.2023

TNPSC  Payilagam
By -
0

 



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.08.2023

  1. மாணவர்களால் எழுதப்பட்ட நூலான Developing Stories-யை மேயர் ஆர்.பிரியா வெளியிட்டுள்ளார்.இந்நூலானது மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் சூழ்நிலையை எடுத்து கூறும் வகையில் எழுதுப்பட்டுள்ளது.
  2. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ‘உன்மேஷா’ சர்வதேச இலக்கிய விழா மற்றும் ‘உத்கர்ஷ்’ நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகளை இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
  3. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவிற்கு மகராஷ்டிர அரசால் உத்யோக் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
  4. ஒன்றிய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது
  5. கேம்ஸ் 24 x 7 மற்றும் கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள குழந்தைகள் கடத்தலுக்கான மாநிலங்கள் பட்டியலில் உத்திரபிரதேசம் முதல் இடம் வகிக்கிறது.இரண்டாம் இடத்தை பீகாரும், மூன்றாம் இடத்தை ஆந்திராவும் பிடித்துள்ளன.குழந்தைகள் கடத்தலுக்கான மாவட்டங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் முதல் இடம் வகிக்கிறது.
  6. கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வக பல்கலைகழத்தில் மீன்வள அடல் வளங்காப்பு மையம் அமைக்க நிதி ஆயோக் சார்பில் ரூ.10கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் மீன்வள அடல்வளங்காப்பு மையம் செயல்பட உள்ளது.
  7. 169 ஆண்டுகள் பழமையான மும்பையின் பைகுல்லா இரயில் நிலையத்திற்கு 2022ஆம் ஆண்டிற்கான யுனஸ்கோ ஆசிய பசுபிக் கலாச்சார பாரம்பரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  8. ஜெர்மெனியில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னித் கெளர் ஆகியோர் காம்பவுண்ட மகளிர் அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
  9. S&P Global இன் அறிக்கை “முன்னோக்கிப் பார்: இந்தியாவின் தருணம்” இந்தியா FY24 முதல் FY31 வரை ஆண்டுக்கு சராசரியாக 6.7% என்ற விகிதத்தில் வளர்ந்து, வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணித்துள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)