TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.08.2023

TNPSC  Payilagam
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.08.2023

  1. சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் நடைபெற்ற 9-ஆம் கட்ட அகழாய்வில் 2 செ.மி. விட்டமும், 1.5 செ.மீ. உயரமும், 8 கிராம் எடையிலான படிகத்திலான எடைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  2. காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டில் நடைபெற்ற 2-ஆம் கட்ட அகழாய்வில் மத்தி என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுடன் 800 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  3. சென்னை சைதாப்பேட்டை பனகல்மாளிகையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடு பிரிவானது (TNFWCCB) தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.(TNFWCCB – Tamilnadu Forest, Wildlife Crime Control Bureau).
  4. ஜி20யின் 3வது எதிர்ப்பு பணிக்குழு கூட்டமானது (3rd Anti-Corruption Working Group Meeting) கல்கத்தாவில் நடைபெற்றது.முதல் இரு எதிர்ப்பு பணிக்குழு கூட்டங்கள் முறையே குருகிராம் (ஹரியானா), ரிஷிகேஷ் (உத்திரகாண்ட்) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
  5. டெல்லாவின் தலைமை நிதி அதிகாரியாக (Tesla CFO) இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனோஜா நியமிக்கப்பட்டுள்ளார்.(Tesla CFO – Tesla Chief Financial Officer)
  6. பிரான்சில் நடைபெறும் கிரயோன் ஓபன் செஸ் போட்டியில் (Crayon Open Chess) தமிழ்நாட்டின் இனியன் பன்னீர் செல்வம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.2வது இடத்தை பரத் சுப்பிரமணியன் பிடித்துள்ளார்
  7. டிரினிடாட் மற்றும் டொபோகோவில் நடைபெறும் காமன்வெல்த் யூத் விளையாட்டு போட்டியில் (Commonwealth Youth Games) ஆடவர் 400மீ நீச்சல் பிரிவில் ஷோவன் கங்கூலி வெள்ளி பதக்கமும் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் அனுப்பிரியா வலியோத் சரி வெண்கலம் பதக்கமும் பெற்றுள்ளன.
  8. சீனாவில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்தியா 26 பதக்கங்களை வென்று 7வது இடத்தை பிடித்துள்ளது.  இதில் 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் ஆகியவை அடங்கும்.சீனா 178 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், ஜப்பான் 93 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் தென்கொரியா 58 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  9. தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனவிலங்கு குற்றங்களை தடுக்க புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் வனவிலங்கு குற்ற தடுப்புப் பிரிவு (WCCB).வனவிலங்கு குற்ற தடுப்புப் பிரிவு ஏற்கனவே 190 க்கும் மேற்பட்ட வனவிலங்கு குற்றங்களை கண்டறிந்துள்ளது, இதில் தந்தம், புலி தோல்கள் மற்றும் பாம்புகள் விற்பனை ஆகியவை அடங்கும்.வனவிலங்கு குற்ற தடுப்புப் பிரிவு தமிழ்நாட்டில் வனவிலங்குகளை பாதுகாப்பதிலும், உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து வனவிலங்கு குற்றங்களை தடுப்பதிலும் உறுதியாக உள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)