TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10.08.2023

TNPSC  Payilagam
By -
0




TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10.08.2023

  1. உலக சிங்க தினம் (World Lion Day) – Aug 10:இந்தியாவில் 2015-ல் 523-ஆக இருந்த சிங்களின் எண்ணிக்கை 2020-ல் 674-ஆக உயர்ந்துள்ளது
  2. மாவட்டம், கீழடியில் நடைபெற்ற 9-ஆம் கட்ட அகழாய்வில் பாம்பு தலை போன்ற சுடுமண் பொம்மையானது கிடைத்துள்ளது.
  3. திண்டிவனத்தில் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் உற்பத்தி செய்ய 111 ஏக்கர் பரப்பில் மருத்துவ உற்பத்தி பூங்கா ஏற்படுத்தப்பட உள்ளது.இப்பூங்காவானது ரூ.155 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் உருவாக்கப்பட உள்ளது.
  4. கேரளாவின் சட்டபேரவையில் கேரளா என்ற பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேறியது.மேலும் பொதுசிவில் சட்டத்தத்திற்கு எதிரான தீர்மானமும்  நிறைவேறியது.பொதுசிவில் சட்டத்தத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த இரண்டாவது மாநிலமாக கேரளா மாறியுள்ளது.மிசோரம் மாநிலமானது பொதுசிவில் சட்டத்தத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த முதல் மாநிலமாக திகழ்கிறது.
  5. இந்திய ராணுவமானது தரவுகளின் தகவல், பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சக கணினிகளில் பயன்படுத்த பிரத்யேக இயங்குதளமான மாயா ஓ.எஸ்-யை உருவாக்கியுள்ளது.
  6. பல்மருத்துவர்கள் சட்டம் 1948-யை ரத்து செய்து பல்மருத்துவ சேவை, பல்மருத்துவ படிப்பு ஒழுங்குபடுத்தும் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவான தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  7. இந்திய செவிலியர் கவுன்சில் சட்டம் 1947-யை ரத்து செய்து தேசிய செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளர் ஆணையம் அமைக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது
  8. இந்திய மேலாண்மை நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பை குடியரசுத்தலைவரிடம் வழங்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது
  9. தில்லி நிர்வாக திருத்த மசோதாவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகள் மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)