TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.08.2023
- டாடா குழுமத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏா் இந்தியாவுக்கு பறக்கும் அன்னப் பறவை வடிவில் இருந்த நிறுவனத்தின் இலச்சினைக்குப் (logo) பதிலாக பொன் நிற இறக்கை வடிவிலான புதிய இலச்சினையை டாடா சன்ஸ் தலைவா் என். சந்திரசேகரன் புது தில்லியில் அறிமுகப்படுத்தினாா். அத்துடன், ஏா் இந்தியாவுக்கு ‘தி விஸ்டாரா’ என்ற புதிய வணிக அடையாளமும் அந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.கடனில் சிக்கித் தவித்த ஏா் இந்தியாவை மத்திய அரசிடமிருந்து டாடா குழுமம் கடந்த 2021 அக்டோபா் மாதம் கையகப்படுத்தியது.
- மத்திய பிரதேசத்தைத் தொடா்ந்து இரண்டாவது மாநிலமாக உத்தரகண்டில் ஹிந்தியில் மருத்துவப் படிப்பு தொடங்கப்பட இருக்கிறது. இந்த மாத இறுதியில் உத்தரகண்ட் மருத்துவக் கல்லூரிகளில் இத்திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்க இருக்கிறாா்.
- ‘மத்திய சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா 2023’ மற்றும் ‘ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா 2023’ ஆகிய இந்த மசோதாக்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரு அவைகளிலும் அறிமுகம் செய்தாா்.இந்தச் சட்டத்திருத்தத்தின்படி, கேசினோ மற்றும் குதிரைப் பந்தய கிளப்புகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் வகையில் துணைப் பிரிவும் விளக்கமும், மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (சிஜிஎஸ்டி) 2017-இன் அட்டவணை 3-இல் சோ்க்கப்படும்.
- நாட்டிலேயே முதன்முறையாக புதுவை ஜிப்மர் மருத்துவமனை குடலியல் அறுவை சிகிச்சை துறையில், கணைய புற்று நோய்க்கான சிக்கலான அறுவை சிகிச்சைரோபோடிக் முறையில் செய்யப் பட்டது.
- ஃபிஷர் ஃப்ரெண்ட் செயலி (Fisher Friend app): மத்திய அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கிய ஃபிஷர் ஃப்ரெண்ட் செயலியானது புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்செயலின் உதவியால் கடலின் தன்மையையும், வானிலை முன்னறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
- நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் வசித்து வந்த கவிஞர் வாய்மைநாதன் காலமானார்.இவர் 1986-ல் எழுதிய நேதாஜி காவியம் தமிழ் வளரச்சித் துறை நிதி உதவியுடன் வெளியிடப்பட்டது.பின்னர் 1990-ல் வாங்க்காசிங்க் என்ற பெயரில் ஹிந்தி மொழியில் வெளியானது.2008-ல் வெளியான கப்பலுக்குள் ஒரு காவியம் தமிழக வளர்ச்சித் துறை பரிசுக்கு தேர்வானது.
- ரிசர்வ் வங்கியானது (RBI) ரெப்போ விகிதம் 6.5%-ஆக தொடரும் என அறிவித்துள்ளது.ரெப்போ விகிதம் என்பது ஆர்பிஐ-யிடம் இருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டியை குறிக்கிறது.ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்பது ஆர்பிஐ மற்ற வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டியை குறிக்கிறது.
- இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860-ஐ மாற்றம் செய்ய பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மசோதா 2023 என்ற மசோதாவும் குற்றவியல் நடைமுறை சட்டம் (CRPA) 1898-ஐ மாற்றம் செய்ய பாரதிய நகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS) மசோதா 2023 என்ற மசோதாவும் இந்திய ஆதாரச்சட்டம் 1882-ஐ மாற்றம் செய்ய பாரதிய சாக்ஷிய (BS) மசோதா 2023 என்ற மசோதாவும் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.
- ரஷ்ய விண்வெளி முகமையான ராஸ்காமோஸ் (Roscosmos) சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராய லூனா – 25 விண்கலமானது சோயுஸ் 2.1பி ராக்கெட் (Soyuz 2.1B Rocket) உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டள்ளது.
- இன்டாகிராம் ரிச் லிஸ்ட் (Instagram Rich List) :பிரிட்டனின் ஹுப்பர் எச்.கியூ நிறுவனம் (Hopper HQ Company) சார்பில் வெளியிடப்பட்டுள்ள இண்டாகிராமில் விளம்பர பதிவுகள் மூலம் அதிக வருமானம் பெறும் 100 நபர்கள் பட்டியலில் விராட்கோலி உலகளவில் 14வது இடமும், விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 3வது இடமும் பிடித்துள்ளார்.விராட்கோலி ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடியை சம்பளமாக பெறுகிறார்.இப்படியலில் கிறிஸ்டியோனா ரொனால்டோ முதலாவது இடத்தையும் (ஒரு பதிவு – ரூ.59.65 கோடி), லயோனஸ் மெஸ்ஸி இரண்டாவது இடமும் (ஒரு பதிவு – ரூ.21.51 கோடி) பிடித்துள்ளனர்