TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.08.2023

TNPSC PAYILAGAM
By -
0



21st August: உலக மூத்த குடிமக்கள் தினம் / World Senior Citizen Day

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.08.2023 

  1. மகராஷ்டிராவின் முதல் உத்யோக் ரத்னா விருதானது (Udyog Ratna Award) டாடா சன்ஸ் நிறுவனரான ரத்தன் டாடாவுக்கு மகராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவால் வழங்கப்பட்டது.
  2. உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கவும், வெங்காய விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரியாக 40% வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
  3. ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு வெளியிட்டுள்ள கோடீஸ்வர மாநிலங்களவை உறுப்பினர்கள் அறிக்கையில் ஆந்திரா அதிக கோடீஸ்வர உறுப்பினர்களை கொண்ட மாநிலமாக திகழ்கிறது நாட்டில் உள்ள 225 மாநிலங்களவை உறுப்பினர்களில் 12% பேர் கோடீஸ்வரராக திகழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. ரஷ்யா தென் துருவ ஆய்வுத் திட்டத்திற்காக விண்ணில் செலுத்திய லூனா 25 விண்கலம் தவறான சுற்றுவட்டப் பாதை சென்றதால் நிலவில் விழுந்து நொறுங்கியது. இதன் காரணமாக ரஷ்யாவின் தென் துருவ ஆய்வுத் திட்டம் தோல்வி அடைந்துள்ளது 1976-ல் ரஷ்யா சோவியத் யூனியாக இருந்தபோது நிலவை ஆய்வு செய்ய லூனா விண்கலத்தை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  5. ஐசிசியால் நடத்தப்படும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இலச்சினையாக ஆண், பெண் சிங்கங்கள் கொண்ட இலச்சினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகில் முதன் முறையாக ஆண், பெண் இலச்சினை தற்போது தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-அக்டேபாபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.
  6. சீனாவில் நடைபெறும் ஆசிய ஜீனியர் ஸ்குவாஷ் போட்டியில் 17வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் அனாஹத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  7. பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இப்போட்டியில் கோல்டன் பந்து விருதானது ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான அடனா பொன்மதிக்கும் சிறந்த கோல் கீப்பர் விருதானது இங்கிலாந்து நாட்டு வீராங்கனையான  மேரிர் எர்ப்ஸ்க்கும் சிறந்த இளம் வீராங்கனை விருதானது ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான சல்மா பராலூலோக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)