TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.08.2023

TNPSC PAYILAGAM
By -
0

22nd August :  சென்னை தினம்/ Chennai Day

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.08.2023

  1. சென்னை நாளையொட்டி தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையின் வரலாறு மற்றும் புகழ்பெற்ற இடங்களைக் குறிப்பிடும் கருப்பு- வெள்ளை படங்கள் இடம்பெறும் புகைப்படக் கண்காட்சி சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளி மாணவர்களின் 'அக்கம் பக்கம்' என்ற இந்த புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். சென்னை தினம்/ Chennai Day
  2. 21.08.2023-ல் தமிழக அரசின் சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்கும் திட்டமான முதல்வரின் பசுமை நல்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  3. கடந்த சில நாள்களாக கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக ரூ.10 கோடி வழங்கி, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
  4. பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் நேரடி மாநாடு இதுவாகும்.
  5. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கியுள்ள க்வாட் நாடுகள் பங்கேற்கும் கடற்படை பயிற்சியானது மலபார் என்னும் பெயரில்  ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்றது இப்பயிற்சியல் இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சஹ்யாத்திரி, ஐஎன்எஸ் கொல்கத்தா போர்கப்பல்கள் இடம் பெற்றன.
  6. பழங்குடியினர் கிராமங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் சாலை போடும் திட்டமான பகவான் பிர்சா முண்டா ஜோராஸ்தே திட்டம் மகாராஷ்டிராவில் துவங்கப்பட்டுள்ளது.
  7. Council of Scientific & Industrial Research (CSIR) மற்றும் National Botanical Research Institute, Lucknow சார்பில் 108 இதழ் கொண்ட தாமரையான நமோ 108 (Namoh 108) என பெயரிடப்பட்ட தாமரை உருவாக்கப்பட்டுள்ளது தாமரையின் அறிவியல் பெயர் நெபுலா லூசிபரா
  8. விஸ்வதாஸ் விது சப்கல் பொலிவியாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
  9. அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா இறுதிச்சுற்றுக்கு 21.08.2 முன்னேறி அசத்தினாா். இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச் இதையடுத்து இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனுடன் பிரக்ஞானந்தா இன்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.35 நகர்த்தலில் முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. நாளை கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
  10. செர்பியா வீரரான ஜோகோவிச் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவின் கோகோ கெளப் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்
  11. நாட்டிலேயே மிகவும் அதிக வயதுடைய ஆசிய வளா்ப்பு யானை பிஜுலி பிரசாத், 89-ஆவது வயதில் அஸ்ஸாம் மாநிலத்தில் 21.08.2023 உயிரிழந்தது.

Post a Comment

0Comments

Post a Comment (0)