TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.08.2023

TNPSC PAYILAGAM
By -
0


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.08.2023

  1. இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி 23.08.2023 மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.CHANDRAYAAN 3 MISSION DETAILS IN TAMIL  
  2. 4600 கோடி மதிப்பீட்டில் சென்னை அருகே பேரூர் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலைய திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தி கீழ் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளது-கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் (Desalination Plant): 
  3. டி.சுந்தரராமன் குழு (D.Sundararaman Committtee):  முன்னாள் தேசிய சுகாதார திட்ட மைய நிர்வாக இயக்குநர் டி.சுந்தரராமன் தலைமையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த, திட்டமானது தனியார் மருத்துவமனைகளில் தடையின்றி செயல்படுத்தவும் தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  4. இந்தியாவின் முதல் பொம்மை நூலகமானது மகாரஷ்டிராவின் மும்பை நகரில் அமைக்கப்பட்டுள்ளது
  5. நீரக்ஷி (Neerakshi): கார்டர்ன் ரீச் கப்பல் கட்டமைப்பு & பொறியியல் நிறுவனம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனம் சார்பில் நீருக்கடியிலுள்ள கண்ணி வெடிகளை கண்டறிய கடலடி வாகனாமான நீரக்ஷி உருவாக்கப்பட்டுள்ளது.
  6. மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியாவால் மத்திய பிரேசத்தின் டாடியா விமான நிலையத்திற்கு (Datia Airport) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
  7. இந்தியாவில் 3.5 டன் எனடை வரையிலான மோட்டார் வாகனங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய கார் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டமானது (பாரத் என்சிஏபி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  8. சச்சின் டெண்டுல்கரை (Sachin Tendulkar) இந்திய தேர்தல் ஆணைய  தேசிய தூதராக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நியமித்துள்ளது. இவர் தேசிய தூதராக 3ஆண்டுகளுக்கு நியமிக்கபட்டுள்ளார் 25.01.1950-ல் புதுதில்லியை தலைமையகமாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் இயங்குகிறது.
  9. BPCL-ன் பிராண்ட் அம்பாசிடராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1976-ல் மும்பையை தலைமையிடமாக கொண்டு BPCL செயல்பட்டு வருகிறது. Bharat Petroleum Corporation Limited – 1976
  10. BRICS கூட்டமைப்பின் 15வது பிரிக்ஸ் உச்சிமாநாடானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறுது.பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடர்புடைய செய்திகள்
  11. அஜா்பைஜானில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதிய இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிந்தது.

Post a Comment

0Comments

Post a Comment (0)