TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.08.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.08.2023:

  1. பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைவதாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார்.பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் 22.08.2023 தொடங்கியது.இந்நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த உறுப்பினர் சேர்க்கை ஜனவரி 1,2024 முதல் கூட்டமைப்பில் இணைகின்றனர்.
  2. இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா - நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் இடையே நடைபெற்ற எஃப்ஐடிஇ (FIDE) உலகக் கோப்பை செஸ் 2023 சாம்பியன் பட்டத்தை உலகின் முதல்நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சென் வென்றுள்ளார்.
  3. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான முகமது நசிமுதின் தலைமையில் 4 பேர் அடங்கிய தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையமானது அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் எம்.சி.சாரங்கன், சி.செல்லப்பன், ஓ.ரவீந்திரன், விஜய் கருணாகரன் ஆகியோர் உறுப்பினராக இடம் பெற்றுள்ளனர்
  4. கோவா கடற்கரையில் உள்நாட்டில் தயாரிக்கப்ட்ட இலகு ரக விமானம் தேஜஸ் போர் விமானம் மூலம் 20,000 அடி உயரத்தில் வானிலுள்ள இலக்குளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அஸ்திரா பிவிஆர் ஏவுகணையை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது.
  5. இந்தியா & யுஏஇ கடற்படை இடையேயான கூட்டு இராணுவ போர் பயிற்சியானது சயீத் தல்வார் என்னும் பெயரில் யுஏஇ-ல் நடைபெற்றுள்ளது. இந்திய இராணுவப் பயிற்சிகளின் பட்டியல் 2023
  6. இந்தியாவின் 54வது புலிகள் காப்பகமாக ராஜஸ்தானில் தோல்பூர்-கரெளலி புலிகள் காப்பகம் உருவெடுத்துள்ளது. ராஜஸ்தானில் ரன்தம்போர் புலிகள் காப்பகம், சரிஸ்கா புலிகள் காப்பகம், முகுந்த்ரா புலிகள் காப்பகம், ராம்கர் விஸ்தாரி புலிகள் காப்பகம் என்ற 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது ராஜஸ்தானின் 5வது புலிகள் காப்பகம் ஆகும்.
  7. 26வது தேசிய மின் ஆளுமை மாநாடானது (National Conference on e-goverance) மத்திய பிரதேசத்தின் இந்தூரில்  நடைபெற்றுள்ளது.கேரளாவானது இந்தியாவின் முதல் மின் ஆளுமை மாநிலமாக திகழ்கிறது.
  8. கல்கத்தா முன்னாள் தலைமை நீதிபதியான பிரகாஷ் ஸ்ரீவத்வசா தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமனம் செய்யப்ட்டள்ளார் NGT – National Green Tribunal – 2010  தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் – 2010
  9. CSIR இந்தியாவின் முதல் இ-டிராக்டரான சிஎஸ்ஐஆர் பிரைமா ஈடி 11 (CSIR Prima ET 11)யை உருவாக்கியுள்ளது. இந்த இ-டிராக்டர் உள்நாட்டிலே தயாரிக்கபட்டுள்ளது. CSIR – Council of Scientific & Industrial Reserve – 1942 CSIR-ன் தலைவராக தமிழ்நாட்டின் கலைச்செல்வி பதவி வகித்து வருகிறார்
  10. அஜர்பைஜானில் நடைபெறும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப்  போட்டியின் ஆடவர் 25மீ ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் அமன் ப்ரீத் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் மகளிர் 25மீ ஸ்டேண்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் தியானா, யாஷிதா ஷோகீன், கிருத்திகாவெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்
  11. கேலோ இந்தியா பெண்கள் லீக் போட்டியின் பெயரானது அண்மையில் அஸ்மிதா பெண்கள் லீக் (ASMITA Woman League) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Post a Comment

0Comments

Post a Comment (0)