TODAY CURRENT AFFAIRS IN TAMIL 29.08.2023

TNPSC PAYILAGAM
By -
0


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 29.08.2023:

  1. தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் தலைவர் எஸ்.கே.கல்தர் தலைமையில் தொடங்கியது. தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை நெற்பயிர் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு உடனடியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவின் அடிப்படையில் இறுதி முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் தில்லியில் இன்று(29.08.2023) கூடியது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
  2. உலகக் கோப்பைக்கு இந்திய மகளிா் தகுதி : ஹாக்கி ஃபைவ்ஸ் ஆசிய தகுதிச்சுற்றில் இந்தியா 9-5 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை (28.08.2023) அசத்தலாக வீழ்த்தியது. இதன் மூலம் தகுதிச்சுற்றின் இறுதிக்கு முன்னேறிய இந்தியா, அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இடம் பிடித்தது.
  3. மீன்பிடி தடைக்கால நிவாரணதொகை ரூ. 8 ஆயிரமாக உயா்வு: அரசாணை வெளியீடு: மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களின் துயரைக் களைய 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அத்தகைய காலங்களில் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது. இந்தத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, பல்வேறு மீனவா் சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளிடம் இருந்து தொடா்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இந்தக் கோரிக்கைகளை ஏற்று, மீனவா்களின் துயரைப் போக்க மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயா்த்தி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா்.
  4. பாகிஸ்தானுக்கு முதல் பெண் இந்திய தூதரக அதிகாரி நியமனம்:பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரியாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் கீதிகா ஸ்ரீவாஸ்தவா திங்கள்கிழமை  (28.08.2023) நியமிக்கப்பட்டாா்.பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பெண் ஒருவா் அதிகாரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். தற்போதைய இந்திய தூதரக அதிகாரி சுரேஷ் குமாா் விரைவில் தாயகம் திரும்புவாா் என்றும் இஸ்லாமாபாதில் கீதிகா ஸ்ரீவாஸ்தவா தனது பொறுப்புகளை விரைவில் ஏற்பாா் என்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரி தெரிவித்தாா். 2005-பிரிவு இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான கீதிகா ஸ்ரீவாஸ்தவா, இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இந்தோ-பசிபிக் பிரிவின் இணைச் செயலராக உள்ளாா்.
  5. ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது-ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்:  இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தொலைபேசி மூலம் திங்கள்கிழமை (28.08.23) தகவல் தெரிவித்தாா். ரஷிய தரப்பில் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என்றும் அவா் அப்போது தெரிவித்தாா். இந்தியா தலைமை வகிக்கும் நிகழாண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் தலைநகா் தில்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், சீன அதிபா் ஷி ஜின்பிங், சவூதி அரேபிய இளவரசா் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.
  6. ஆந்திர முன்னாள் முதல்வா் என்.டி.ராம ராவ் நினைவு நாணயம்:குடியரசுத் தலைவா் வெளியிட்டாா்:இதுதொடா்பாக தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆந்திர முன்னாள் முதல்வா் என்.டி.ராம ராவின் நினைவு நாணயத்தை குடியரசுத் தலைவா் முா்மு சனிக்கிழமை (என்.டி.ராமராவ் உருவம் பொறிக்கப்பட்ட ரூ. 100 நாணயம் வெளியிடப்பட்டள்ளது )வெளியிட்டு பேசுகையில், ‘தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இந்திய திரைத்துறைக்கும், பண்பாட்டுக்கும் என்டிஆா் வளம் சோ்த்தாா். தனது நடிப்பின் மூலம் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு உயிா் கொடுத்தாா். அவா் நடித்த ராமா் மற்றும் கிருஷ்ணா் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக இருந்தன. இதனால் அவரை பொதுமக்கள் பெரிதும் நேசித்தனா். தனது நடிப்பின் மூலம் சாமானியா்களின் வலியையும் அவா் வெளிப்படுத்தினாா். அசாதாரண ஆளுமை மற்றும் கடின உழைப்பின் மூலம், இந்திய அரசியலில் தனித்துவமான அத்தியாயத்தை எழுதினாா். பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்தாா். அந்தத் திட்டங்கள் இன்றளவும் நினைவுகூரப்படுகின்றன.

Post a Comment

0Comments

Post a Comment (0)