தமிழக அரசுக்கு ‘சஃகுஷால்’ விருது 2023

TNPSC PAYILAGAM
By -
0



நோயாளிகள் பாதுகாப்பு சேவை: தமிழகத்துக்கு ‘சஃகுஷால்’ விருது 2023:

நோயாளிகள் பாதுகாப்பு சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. சா்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஆண்டு தோறும் செப். 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

இந்த தினம் அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது குறித்த நடைமுறைகளை முன்நிலைப்படுத்துவதாகும். 

மத்திய அரசு சுகாதாரத் துறையின் 2023-ஆம் ஆண்டுக்கான 5-ஆவது சா்வதேச நோயாளி பாதுகாப்புத் தினத்தின் தேசிய அளவிலான நிகழ்ச்சி கடந்த 15-ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசுக்கு ‘சஃகுஷால்’ விருது வழங்கப்பட்டது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)