முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன
அணிகலப் பெயர்கள்:
இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.
சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாற்றை கூறும் நூல்.
வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு
- சிலப்பதிகாரம்- CILAPPATIKARAM--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- மணிமேகலை- MANIMEGALAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- சீவக சிந்தாமணி -SEEVAKA CHINTAMANI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- வளையாபதி- VALAYAPATHI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- குண்டலகேசி - KUNDALAKESI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
நூல் |
சமயம் |
பாவகை |
ஆசிரியர் |
நூல் அமைப்பு |
சிலப்பதிகாரம் |
சமணம் |
நிலைமண்டில ஆசிரியப்பா + கொச்சக கலிப்பா |
இளங்கோவடிகள் |
3 காண்டம், 30 காதை, 5001அடிகள் |
மணிமேகலை |
பௌத்தம் |
நிலைமண்டில ஆசிரியப்பா |
சீத்தலைச் சாத்தனார் |
30 காதை, 4755 வரிகள் |
சீவகசிந்தாமணி |
சமணம் |
விருத்தம் |
திருத்தக்கதேவர் |
13 இலம்பகம், 3145 பாடல்கள் |
வளையாபதி |
சமணம் |
விருத்தம் |
|
72 பாக்கள் கிடைத்துள்ளன |
குண்டலகேசி |
பௌத்தம் |
விருத்தம் |
நாதகுத்தனார் |
224 பாடல்கள் கிடைத்துள்ளன |
- ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
- ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்
- (திருத்தணிகைஉலா) சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
- மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்
- வளையாபதி = பெயர் தெரியவில்லை
- குண்டலகேசி = நாதகுத்தனார்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
- சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி