AKANANURU -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

                                 

                                                              பகுதி – (ஆ) – இலக்கியம்

    ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES - எட்டுத்தொகை:

AKANANURU அகநானூறு-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES :

அகநானூறு எட்டுத்தொகை எனப்படும் சங்ககாலத்தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, 'நெடுந்தொகை' (நெடுமை+தொகை, நெடிய அல்லது நீண்ட பாடல்களின் தொகுப்பு) என்றும் கூறுவர்.

நூலமைப்பு:

இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாக 13 அடிகளையும் அதிக அளவுவாக 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை

  • களிற்றியானை நிரை(1-120)
  • மணிமிடை பவளம் (121-300)
  • நித்திலக் கோவை (301-400)

என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.

பாடல் வைப்புமுறை:

  • 1,3,5,... என ஒற்றை எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - பாலைத்திணை(200 பாடல்கள்)
  • 10,20,... என வரும் பாடல்கள் - நெய்தல் திணை(40 பாடல்கள்)
  • 4,14,... என 4 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - முல்லைத்திணை(40 பாடல்கள்)
  • 2,8,12,18 என 2,8 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - குறிஞ்சித்திணை(80 பாடல்கள்)
  • 6,16,26 என 6 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - மருதத்திணை(40 பாடல்கள்)

வேறு பெயர்கள்:

  • அகம்
  • அகப்பாட்டு
  • நெடுந்தொகை
  • நெடுந்தொகை நானூறு
  • நெடும்பாட்டு
  • பெருந்தொகை நானூறு

தொகுத்தவர்:

இத்தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத்தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர்[சான்று தேவை] எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

அகநானூற்றின் மூன்று பகுப்புகள்:

அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை 'நெடுந்தொகை அகவல்' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான்

களிற்றியானைநிரை: 1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம் : 121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை : 301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஓரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூற்றில் வரலாற்றுச் செய்திகள்:

அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும் ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலும் வாணிபமும்:

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்தி அகநானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைப் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தி காணப்படுகிறது. முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி 

(அகநானூறு, 149:9-11)

(நன்கலம் = நல்ல கப்பல்; கறி = மிளகு) இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.

"உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்"(225)

என்ற வரிகள் பெரிய கப்பலை பற்றி எடுத்துரைக்கிறது

வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்:

அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளை நீராட்டித் தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தித் திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது.

பதிப்பு வரலாறு:

இந்நூல் உரையுடன் முதற் பகுதி 'மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிப்போட் மயிலாபூர்' என்றவர்களால் 1918-இல் முதலில் பதிப்பிக்கபட்டது. ஆனால், இப்பதிப்பின் முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் பார்க்கக் கிடைக்கவில்லை, அகநானூற்றின் இரண்டாம் பகுதி 1920-இல் வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்த தகவலைத் தவிர இப்பதிப்பும் பார்க்கக் கிடைக்கவில்லை. இந்நூலின் முழு பதிப்பானது 1923-இல் 'அகநானூறு மூலமும் பழைய உரையும்" என்னும் பெயரில் ரா.இராகவையங்கார் பதிப்பிக்க, கம்பர் விலாசம் இராஜகோபாலையங்கார் என்பவரால் வெளியிடபட்டது

KEY POINTS TNPSC EXAMS -அகநானூறு

  • அகம்+நான்கு+நூறு = அகநானூறு
  • அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.
  • இதனை நெடுந்தொகை எனவும் கூறுவார்
  • திணை = அகத்திணைபாவகை = ஆசிரியப்பாபாடல்கள் = 400பாடியோர் = 145அடி எல்லை = 13-31
  • 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:1. கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)2. மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)3. நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)
  • திணைப் பாகுபாடு:1,3,5,7,9 என வருவன = பாலைத்திணை( 200 பாடல்கள்)2,8,12,18 என வருவன = குறிஞ்சித்திணை( 80 பாடல்கள்)4,14,24 என வருவன = முல்லைத்திணை( 40 பாடல்கள்)6,16,26 என வருவன = மருதத்திணை( 40 பாடல்கள்)10,20,30 என வருவன = நெய்தல் திணை( 40 பாடல்கள்)
  • தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
  • தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிர பெருவழுதி
  • இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது
  • நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

முக்கிய அடிகள்:

நாவோடு நவிலா நகைபடு தீஞ்சசொல் 

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்

யவனர் தந்த வினைமாண் நன்கலம் 

பொன்னோடு வந்து கறியோடு பெயரும்


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)