ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES :
எட்டுத்தொகை அல்லது தொகை நூல்கள் என்பவை.சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை.எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியங்களில் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.
எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து, சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 410 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்
எட்டுத்தொகை நூல்கள்
- நற்றிணை-NARRINAI -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- குறுந்தொகை-KURUNTHOGAI --TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- ஐங்குறுநூறு-AINKURUNURU-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- பதிற்றுப்பத்து-PATIRRUPPATTU-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- பரிபாடல்-PARIPAADAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- கலித்தொகை-KALITHOGAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- அகநானூறு-AKANANURU -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- புறநானூறு-PURANANURU -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
எட்டுத்தொகை நூல்களும் நூல் ஆசிரியர்களும்:
தொகைநூல் |
தொகுத்தவர் |
தொகுப்பித்தவர் |
|
அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை) |
மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன் |
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி குறிப்பு
பாடலடி 13 முதல் 31 |
|
ஐங்குறுநூறு |
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் |
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார் குறிப்பு:
ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல், 5 திணைக்கும் 500 பாடல் |
|
கலித்தொகை |
நல்லந்துவனார் |
புலப்படவில்லை குறிப்பு : 5 திணைக்கும் கலிப்பாவால் அமைந்த பாடல்கள் உள்ளன |
|
குறுந்தொகை |
பூரிக்கோ |
பூரிக்கோ குறிப்பு :பாடலடி 4 முதல் 8 |
|
நற்றிணை |
தெரியவில்லை |
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி குறிப்பு :பாடலடி 9 முதல் 12 |
|
பதிற்றுப்பத்து |
தெரியவில்லை |
தெரியவில்லை குறிப்பு:
அரசருக்கு 10 என்ற முறையில் 10 அரசர்கள்மீது 10 புலவர்கள் பாடிய 100 பாடல்கள், (முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை |
|
பரிபாடல் (பரிபாட்டு) |
கீரந்தையார் |
தெரியவில்லை குறிப்பு:
திருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மிது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன. |
|
புறநானூறு (புறம்) |
தெரியவில்லை |
தெரியவில்லை குறிப்பு:
புறத்திணைப் பாடல்கள் |
அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர்
1.அகப்பொருள் நூல்கள் : 5 நூல்கள்:
உள்ளம் ஒத்த தலைவனும் தலைவியும் ஊடல் ஏற்பட்டுப் பின்பு காதலால் இன்பம் துய்ப்பது ஆகும். காதல் இன்பம் இத்தகையது என்று பிறருக்குச் சொல்ல முடியாதபடி உள்ளத்தினுள் (அகம்) அனுபவிக்கும் உணர்ச்சியே அகப்பொருள் ஆகும்.
1.நற்றிணை
2.குறுத்தொகை
3.ஐங்குறுநூறு
4.கலித்தொகை
5.அகநானூறு
2.புறப்பொருள் நூல்கள் : 2 நூல்கள்
இருபெரும் மன்னர்களின் மண்ணாசையினால் ஏற்படுகின்ற போர்ச்செய்திகளைக் கூறுவது. போர் எவ்வாறு ஆரமிக்கும் என்பதிலிருந்து மனித கற்பனைகளுக்கு எட்டாதவாறு இவ்வாறெல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளது பாராட்டத்தக்கது. படிப்பவர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப ஒன்றுவிடாமல் வரிசையாக அனைத்தும் சொல்லியுள்ளது ஆகும். இத்தகையது என்று பிறருக்குப் புலப்படுத்தும் உணர்ச்சியே புறப்பொருள் ஆகும்.
1.பதிற்றுப்பத்து
2.புறநானூறு
இங்கு, அகம்புறம் ஆகிய இரண்டும் சேர்ந்து வருவது பரிபாடல் மட்டுமே
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகியவைகள் முதலில் தொகுக்கப்பட்டன. கலித்தொகை இறுதியில் தொகுக்கப்பட்டது.
பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றைத் தொகுத்த விவரம் கிடைக்கவில்லை.
அகப்பொருட்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்கள் அழிந்தும் சிதைந்தும் பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.
எட்டுத்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை 3 அடி ஆகும். பேரெல்லை 140 அடி ஆகும்.
எட்டுத்தொகையில் 700 புலவர்கள் பாடிய பாடல்கள் 2360கொண்டவையாக உள்ளன. அவர்கள் அனைவரும் பல ஊரினர், பலவாய தொழிலினைக் கொண்டவர்கள், பல்வேறு காலத்தவர்கள், அரசர்கள் முதல் சாதாரண புலவர்கள் வரை இவற்றில் அடங்குவர். ஆனால் எட்டுத்தொகை நூல்கள் அனைத்தும் பலபேர் பாடியபோதிலும் ஒருவரே பாடியது போன்று அமைந்துள்ளது சிறப்பாகும். ஒரே வகையான மரபுகள், ஒருதிற இலக்கியப்போக்கு, ஒருநெறியாய நாகரிகம், உண்மைத்தன்மை ஆகிய கொண்டு இலங்குகிறது.
எட்டுத்தொகை தொகுக்கப்பட்ட காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்பர்.
எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட பின்னர் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு ஆகிய ஐந்தினுக்கும் அவ்வத்தொகை நூல் பாடலின் அமைப்பில் ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப்பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடி இணைத்தார். தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் காட்டும் ‘எரி எள்ளு அன்ன நிறத்தன’ எனத் தொடங்கும் பாடலை பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப்பாடலாகக் கொள்வர். பரிபாடல் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெயர் தெரியவில்லை. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தை நூலாசிரியர் நல்லந்துவனாரே இயற்றி உள்ளார்.
எட்டுத்தொகை நூல்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு.
1.கலித்தொகை ( கலிப்பா)
2.பரிபாடல் ( பரிபாட்டு)
எட்டுத்தொகை நூல்களில் காலத்தால் முந்தியது புறுநானூறு ஆகும்.
எட்டுத்தொகை நூல்களில் காலத்தால் பிந்தியது கலித்தொகை மற்றும் பரிபாடல் ஆகியன.
எட்டுத்தொகை நூல்கள் பல்வகைப் பொருள் பற்றியன
அகப்பொருட் பாடல்களில் தலைவனின் பண்புகள், தலைவியின் கற்ப நெறி, மனம் சார்ந்த காதல் உணர்வுகள், உறவுநிலைகளின் வெளிப்பாடுகள், இல்வாக்கையின் தத்துவம், ஐந்திணை அறம், மக்களின் பழக்கவழக்கம் ஆகியனவும்.
புறப்பொருட் பாடல்களில் மன்னர்களின் மறம், கொடை திறன், மகளிரின் வீரம், அறநெறி கோட்பாடுகள், ஆட்சிமுறை, வாழ்வுநெறிகள், வரலாற்றுக் கூறுகள், புராணச் செய்திகள், போர்முறைகள், மறவர்களின் பண்புநிலை, விருந்தோம்பல் பண்பு போன்றவைகள் சுட்டப்பட்டுள்ளன.