குண்டலகேசி -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0



பகுதி – (ஆ) – இலக்கியம்

ஐம்பெருங் காப்பியங்கள்:

குண்டலகேசி

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.

  • ஆசிரியர் = நாதகுத்தனார்
  • காலம் = கிபி.9ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = பௌத்தம்

பெயர்க்காரணம்:

துறவியான போது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றாள். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது.

நூலின் வேறு பெயர்கள்:

  • குண்டலகேசி விருத்தம்
  • அகல கவி

KEY POINTS TNPSC EXAMS - KUNDALAKESI

  1. சமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல் இது.
  2. புறத்திரட்டு, நீலகேசி உரை முதலியவற்றால் 224 பாடல்கள் கிடைத்துள்ளன.
  3. பத்திரை “சாரிபுத்தரிடம்” தோற்று பௌத்த சமயம் தழுவினாள்.

மேற்கோள்:

  • பாளையாம் தன்மை செத்தும்
  • பாலனாம் தன்மை செத்தும்
  • காளையாம் தன்மை செத்தும்
  • காமுறும் இளமை செத்தும்
  • மீளும் இவ் இயல்பும் இன்னே
  • மேல்வரும் மூபுன் ஆகி
  • நாளும் நாள் சாகின்றோமால்
  • நமக்கு நாம் அழாதது என்னோ
ஐம்பெருங்காப்பியங்கள்-டி.என்.பி.எஸ்.சி தமிழ் இலக்கியக் குறிப்புகள் 
  1. சிலப்பதிகாரம்- CILAPPATIKARAM--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
  2. மணிமேகலை-  MANIMEGALAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
  3. சீவக சிந்தாமணி -SEEVAKA CHINTAMANI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
  4. வளையாபதி- VALAYAPATHI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
  5. குண்டலகேசி - KUNDALAKESI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)