பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும். இதன் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாடலின் தொகுப்புச் செய்திகளைக் கூறுகின்றன.
ஆரிய அரசன் பிரகத்தன் என்பவருக்குத் தமிழின் பெருமை உணர்த்த வேண்டி ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றது.இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.அவ் அரசன் தமிழர்தம் காதல் ஒழுக்கத்தை அறிந்துகொள்ள,குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது.
இந்தப் பாடலின் முடிவில் இரண்டு வெண்பாக்கள் உள்ளன. இவை கபிலரால் இயற்றப்பட்டவை அன்று. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பினைச் செய்தவர் எழுதிச் சேர்த்த பாட்டுகள்.
முதல் பாடல் இப்பாட்டில் வரும் தலைவன், தலைவி, தோழி, தாயர் ஆகிய யார்மீதும் குற்றம் இல்லை என்று கூறுகிறது.
இரண்டாம் பாடல் வடமொழியாளரின் காந்தருவ மணத்துக்கு நிகரானது என்று கூறுகிறது.
- திணை = குறிஞ்சித்திணை
- பா வகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 261
- பாடிய புலவர் = கபிலர்
- ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக
- வேறுபெயர்கள்:பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர்,பரிமேழலகர்),களவியல் பாட்டு
அறத்தோடு நிற்றல் துறையின் நிலைகள்:
- எளித்தல்
- ஏத்தல்
- வேட்கை உரைத்தல்
- ஏதீடு
- தலைப்பாடு
- உண்மை செப்பும் கிளவி
- கூறுதல் உசாதல்
KEY POINTS TNPSC EXAMS-KURINCHIPATTU
- ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இயற்றியது.
- அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது.
- கோவை நூல்களுக்கு குறிஞ்சிப்பாட்டு வழிக்காட்டியது என்பர்.
- 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார்
- தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் தான் முதன் முதலில் குறிஞ்சிப்பாட்டின் ஏடுகளை திரட்டி ஒழுங்குப்படுத்தி பதிப்பித்தார்.
- “இம்மலர்க் குவியலை 34 அடிகளில் உரைத்தமையால் கபிலர் இயற்கையை வருணிப்பதில் உலகிலேயே தலைச்சிறந்தவர் ஆகிறார்” எனத் தனிநாயகம் அடிகள் பாராட்டுகிறார்.
முக்கிய அடிகள்:
- முத்தினும்மணியினும் பொன்னினும் அத்துணை
- நேர்வரும் குரைய களம் கொடின் புணரும்
- சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
- மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
- ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
- எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்
- இகல்மீக் கடவும் இருபெரும் வேந்தர்
- வினையிடை நின்ற சான்றோர் போல
- இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலோன்