பகுதி – (ஆ) – இலக்கியம்
ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES - எட்டுத்தொகை:
குறுந்தொகை: KURUNTHOGAI --TNPSC TAMIL ILLAKKIYAM NOTES
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. இந்நூல் எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துச் சுட்டும் பழம்பாடலில் "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுகிறது.
இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக அதாவது 235 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது.
இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புகளை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாடியோர்:
இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அதில் அமைந்த சிறப்புத் தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர்.
அவர்களில் 'அணிலாடு முன்றிலார்' (குறுந்.பா.41), 'செம்புலப்பெயல் நீரார்' (குறுந். பா.40),
'குப்பைக் கோழியார்'(குறுந்.பா.305),
'காக்கைப் பாடினியார்'(குறுந்.பா.210),
'விட்ட குதிரையார்'(குறுந்.பா.74)
'மீனெறி துாண்டிலார்'(குறுந்.பா.54) '
ஓரேருழவனார்' (குறுந்.பா.131.),
'காலெறி கடிகையார்' (குறுந்.பா.267),
கல்பொரு சிறுநுரையார்' (குறுந்.பா.290),
முதலானோர் உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
நூலமைப்பு:
குறுந்தொகை நான்கு முதல் எட்டு வரையான (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அடிகளைக் கொண்டமைந்த 405 பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூல் அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுகின்ற போதும் முதற்பொருள் மற்றும் கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தந்துள்ளது. இதில் வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.
திணைவாரியாகப் பாடல்களின் எண்ணிக்கை:
- குறிஞ்சி – 145 பாடல்கள்
- முல்லை – 45 பாடல்கள்
- மருதம் – 50 பாடல்கள்
- நெய்தல் – 71 பாடல்கள்
- பாலை – 90 பாடல்கள்
- நல்ல குறுந்தொகை
- குறுந்தொகை நானூறு (இறையனார் களவியல் உரை கூறுகிறது)
- தொகுத்தவர் = பூரிக்கோ
- தொகுப்பிதவர் = தெரியவில்லை
இந்த நூலின் முதல் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத அடுத்த 20 பாடல்களுக்கு ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.
குறுந்தொகை காட்டும் செய்திகள்:
குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்குப் "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலாற்றுச் சான்றாகும்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே. (குறுந்.பா.3.)
என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.
"வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.
பதிப்பு வரலாறு:
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்
50 KEY POINTS TNPSC EXAMS -குறுந்தொகை
- திணை = அகத்திணைபாவகை = ஆசிரியப்பாபாடல்கள் = 400புலவர்கள் = 205அடி எல்லை = 4-8
- குறுமை+தொகை = குறுந்தொகை
- குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
- ‘நல்ல’ எனும் அடைமொழி பெற்ற நூல்.
- குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.
- அகப்பொருள் பற்றிய பாடல்களைப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடியுள்ளார்கள்.
- இப்பாடல்கள் குறைந்த நான்கடிகளையும், அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன.
- இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.
- பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
- இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
- இந்நூல் வாயிலாகப் பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.
- நூலை முதலில் வெளியிட்டவர் : சௌரிபெருமாள் அரங்கனார்
- நூலை முதலில் பதிப்பித்தவர் : சி.வை.தாமோதரம் பிள்ளை
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் : முருகன்
- எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
- பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
- வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்.
- உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.
- குறுந்தொகையின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
- திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகை பாடலே.
- இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
- எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
- நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
- கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
- அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
- இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
- இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
- பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை வாழ்த்திப் பாடிய பாடல் கடவுள் வாழ்த்தாக இடம் பெற்றுள்ளது. கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 அகத்திணைப் பாடல்களைப் கொண்டுள்ளது. 205 பேர் பாடியுள்ளனர்.
- 380 பாடல்களுக்குப் பேராசிரியரும், எஞ்சிய 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை வகுத்துள்ளனர். ஆனால் இவ்வுரைகள் கிட்டவில்லை. பிற்காலத்தில் டாக்டர். உவேசா. எழுதியுள்ளார்.
- இதன் உரையின் குறுந்தொகைப் பாடல்களையே அவர்கள் உரை முன்னுரையில் உரையாசிரியர்கள் மிகுதியாக எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்,
- இதில் முதல் கருப் பொருட்களைவிட உரிப் பொருட்களுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.
- வருணனை குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படும். இதில் பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகளைக் காணலாம்.
- கருப் பொருளின் பின்னணியில் மாந்தரின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சீரிய முறையில் சித்திரித்துக் காட்டும் இக்குறுந்தொகை. ‘கொங்குதேர் வாழ்க்கை‘ யெனும் இரண்டாம் பாடல் சிறந்த வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது. இப்பாடல், திருவிளை யாடற் புராணத்தின் தருமி வரலாற்றிற்கு அடித்தளமிட்டது
- சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்டேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்று பல பேரரசர்கள், சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
- இந்நூலில் பல பாடல்களுக்கு ஆசிரியர் யார் என்பது அறியப்படவில்லை. ஆனால் அப்பாடல்களில் சிறந்து விளங்கும் தொடர்களின் சிறப்பு நோக்கி, தொடர்களையே ஆசிரியர். அமைத்து வழங்கினர்.
- இயற் பெயரும் சிறப்புப் பெயரும் இணைத்து வழங்கும் புலவர்கள் – 5
- உவமையால் பெயர் பெற்ற புலவர்களின் தொகை – 18
- ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 10
- குறுந்தொகைப் பாடிய பெண்பால் புலவர்கள் – 11
- அதிக எண்ணிக்கையில் குறுந்தொகைப் பாடல்களைப் பாடியவர் – கபிலர் (குறிஞ்சித்திணை)
- தலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கும் தலைவி இப்பிறப்பில் அவன் அன்பு கிடைக்காவிட்டாலும் மறுபிறப்பிலாவது அவனைக் கணவனாக அடைவேன்” என்று வேண்டிக் கொள்ளுவாள்.
- பழைய மரத்திலே தெய்வம் வாழும் அது பயப்படத் தகுந்த தெய்வம், கொடியோரைத் துன்புறுத்தும் என்று நம்பினர்.
- கொல்லிமலையிலே பயங்கரமான பெரிய கண்களையுடைய தெய்வம் உண்டு அம்மலையின் மேற்குப் பாகத்திலே வணங்குவோர்க்கு நன்மை தரும் கொல்லிப்பாவை என்னும் தெய்வமும் உண்டு என்று நம்பினர்.
- செல்வர்கள் தங்கள் குழந்தைகளின் கால்களிலே தவளை வாயைப்போல் காணப்படும் பொன்னாற் செய்த கிண்கிணிகளைப் போட்டிருப்பார்கள்.
- அறிவுடையவர்கள் பொய்ச் சாட்சி சொல்லமாட்டார்கள்.
- மக்கள் காடுகாள் என்னும் தெய்வத்தை வணங்கி வந்தனர். அது சூலத்தைக் கையிலே வைத்திருக்கும் பெண் தெய்வம் சூலி என்ற பெயரும் அதற்குண்டு. அத்தெய்வத்தை வேண்டிக்கொள்ளுவோர் கையிலே நூலால் காப்புக்கட்டிக் கொள்ளுவார்கள்.
- கூரையின் மேலிருந்து காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்று நம்பினர்.
- நோய்தீரத் தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொள்ளுவார்கள். அதற்குப் பூசை போடுவார்கள். பெண்களைப் பேய் பிடிப்பதுண்டு என்று நம்பினர்.
- அணிலோடு முன்றிலார்
- குப்பைக் கோழியார்
- காக்கைப்பாடினியார்
- விட்ட குதிரையார்
- மீனெறி தூண்டிலார்
- வெள்ளிவீதியார்
குறுந்தொகையில் வடமொழிப் பெயர்கள்
- உருத்திரன்
- சாண்டிலியன்
- உலோச்சணன்
- பௌத்திரன்
குறுந்தொகை குறிப்பிடும் அரசர்கள்
- சோழன் கரிகாலன்
- பசும்பூண் பாண்டியன்
- ஓரி
- குட்டுவன்
- பாரி
- நள்ளி
குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்
- ஔவையார்
- வெள்ளிவீதியார்
- வெண்பூதியார்
- ஆதிமந்தி
முக்கிய பாடல் வரிகள்:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே - (தேவகுலத்தார்)
வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே - (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே