சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. "பெருகு வளமதுரைக் காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படும் இப்பாட்டு "கூடற்றமிழ்" என்றும் "காஞ்சி பாட்டு"என்றும் சிறப்புப் பெயர்களைப்பெறும்.
பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.
- திணை = மருதம், புறத்திணை
- பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா
- அடி எல்லை = 782
- பாடிய புலவர் = மாங்குடி மருதனார்
- பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பெயர்க்காரணம்:
மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக்காஞ்சி
வேறு பெயர்கள்:
- மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)
- கூடற் தமிழ்
- காஞ்சிப்பாட்டு
நாளங்காடி மற்றும் அல்லங்காடி:
சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதனால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.
பாண்டியனின் போர் வெற்றி:
- கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
- குறுநில மன்னர்கள் ஐவர் = திதியன், எழினி, எருமையூரன், பொருளன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களை தோற்கடித்தான்
பாண்டியனின் முன்னோர்:
- முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
- நிலத்திரு திருவிற் பாண்டியன்
KEY POINTS TNPSC EXAMS-MADURAIKANCHI
- நிலையாமையை உணர்த்தும் திணை காஞ்சித்திணை
- தொல்காப்பியரின் காஞ்சித்திணை நிலையாமை பற்றியது; புறப்பொருள் வெண்பா மாலையின் காஞ்சித் திணை போர் பற்றியது.
- பத்துப்பாட்டின் அதிக அடிகளை கொண்டது
- பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகுவளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.
- மதுரையின் நாள் அங்காடியும்(பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.
- இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்
- மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா.
- ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யாவற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.
முக்கிய அடிகள்:
- கரை பொருது இறங்கும் கணைஇரு முந்நீர்
- திரையீடு மணலிலும் பலரே, உரைசொல்
- மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
- அளந்து கடை அறியா வளம்கெழு தாரமொடு
- புத்தேன் உலகம் கவினிக் காண்வர
- மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை