சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
- பொருள் =ஆற்றுப்படை
- திணை = புறத்திணை
- பா வகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 583(ஆற்றுப்படை நூல்களுள் பெரிய நூல்)
பெயர்க்காரணம்:
மலைக்கு யானையை உவமித்து மலையில் உண்டாகும் ஓசைகளைக் கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் “மலைப்படுகடாம்” எனப்படுகிறது.
கடாம் = யானையின் மதநீர்
வேறுபெயர்:
கூத்தராற்றுப்படை(கூத்தன் ஒருவன் பிற கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதால்)
மலைப்படுகடாம் குறிப்பிடும் இசைக்கருவிகள்:
கருவி |
விளக்கம் |
முழவு |
பறை |
ஆகுளி |
சிறுபறை |
பதலை |
தபேலா |
கோடு |
கொம்பு |
பாண்டில் |
ஜால்ரா |
KEY POINTS TNPSC EXAMS- MALAIPADUKADAM
- பாடிய புலவர் = இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
- பாட்டுடைத் தலைவன் = நன்னன் சேய் நன்னன்
- மலைப்படுகடாம் குறிப்பிடும் இசைக்கருவிகள்:
- நன்னன் ஆண்ட பகுதி சவ்வாது மலைப்பகுதி.
- கூத்தரைக் “களம் பெரு கண்ணுளர்” என்று கூறுகிறது.
- சிவனைக் “காரி உண்டிக் கடவுள்” என்கிறது.
- பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாக கூறும் நூல் மலைப்படுகடாம் ஆகும்
- நன்னனின் தலைநகரம் = செங்கண்மா(இன்றைய செங்கம்)
- நன்னனின் மலை = நவிரமலை
- நன்னனின் மனைவி கற்புக்கென்று தனிக்கொடி கண்டவள்.
- ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது.
- நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின்
- முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளது.
- 583 அடிகளை கொண்டது. கூத்தராற்றுப்படை என அழைக்கப்படுகிறது.
- மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
- நன்னன் என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவனாக கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார் பாடியது மலைபடுகடாம்.
முக்கிய அடிகள்:
- குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
- மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
- செருசெய் முன்பின் குருசில் முன்னிய
- பரிசில் மறப்ப நீடலும் உரியீர்
- இட்ட எல்லாம் பொட்டாங்கு விளைய
- பெயரோடு வைகிய வியன்கண் இரும்புனம்
- தலைநான் அன்ன புகலொடு வழிசிறந்து
- பலநாள் நிற்பி
- அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,
- கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி,
- அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி நோ னாச் செருவின் வலம்படு நோன்தா ள் மான விறல்வேள் வயிரியம் எனினே, நும்இல் போ ல நில்லாது புக்கு,
- கிழவிர் போலக் கேளாது கெழீஇ சேட் புலம்பு அகல இனிய கூறி பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்